போகர் உருவாக்கிய பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகர் சிலையின் சிறப்புகள்…!!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

போகர் உருவாக்கிய பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகர் சிலையின் சிறப்புகள்…!!

நவபாஷாணம் என்றதும் நம் எல்லோர் நினைவுக்கும் வருவது பழனி முருகன் சிலையும், அதை உருவாக்கிய போகர் சித்தரையும்தான். நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை முறைப்படி சரியான விகிதத்தில் கலந்தால் அதுவே மருந்தாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் இருக்கின்றது. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க செய்யும் குணமுடையது. ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு. அதை சித்த மருத்துவமுறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.

1. சாதிலிங்கம், 2. மனோசிலை, 3. காந்தம், 4. காரம், 5. கந்தகம், 6. பூரம், 7. வெள்ளை பாஷாணம், 8. கௌரி பாஷாணம், 9. தொட்டி பாஷாணம் என இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. பழனி மலைக்கோவில், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோவில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு போகர் உருவாக்கியது. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியதென தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »