சிவலிங்கத்திற்கு விளக்கம் கொடுக்க முடியுமா?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிவலிங்கத்திற்கு விளக்கம் கொடுக்க முடியுமா?

ஏன் முடியாது? இதோ விளக்குகிறேன்…👇

லிங்கம் என்றால் ‘குறியீடு’ (SYMBOL), சிவலிங்கம் என்பது இறைவனின் குறியீடு!

இறைவனை பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு…
எதையும் கடந்து நிற்பவன் பரம் (கடவுள்)!

உருவம், குணம் இவை அனைத்தையும் கடந்து நிற்கும் பொழுது இறைவன் நிர்க்-குணப்பிரம்மம்…

உருவமாய் கண்களுக்கு காட்சி தரும்பொழுது இறைவன் ச-குணப்பிரம்மம்!

இறைவன் கண்களுக்கு காட்சி தரும்பொழுது உருவம்…

உருவமே இல்லாத, குறியீடே இல்லாத ஒரு சக்தி நிலை என்பது அருவம்!

உருவமும் அல்லாது, அருவமும் அல்லாது, இருக்கும் பொழுது அருவுருவம்…

சிவலிங்கம் என்பது அருவுருவம்!!!

உருவமாக பார்த்தால் இறைவனும் மனிதர்களை போலவே அனைத்து உடலுறுப்புகளுடனும் கானப்படுவார்…

உருவம் என்பது வெறும் மனித உருவம் மட்டுமே அல்ல!
மரம், செடி, விலங்குகள், பறவை என அனைத்து உருவங்களிலும் இறைவனை காணலாம்…

குறிப்பு:- தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்ணன்னு மனிதர்களாய் பல உருவத்தில் இறைவனை பார்த்துள்ளோம்!

இறைவன் உருவமுமாய், அருவமுமாய் இருக்கின்றார்…
இதில் உருவமே இல்லை என்பதை நம்புவதா? அருவம் என்பதை நம்புவதா? என்ற கேள்வி உங்களுக்கு எழுமேயானால் அதற்கான பதிலும் ஒரு கேள்விதான்.!

தண்ணீர் உருவமா? இல்லை அருவமா?

நீராவியாக இருக்கும் பொழுது தண்ணீர் அருவம் அது நம் கண்களுக்கு தெரியாது…
ஆனால், அதே தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி வைக்கும் பொழுது அதன் உருவம் நம் கண்களுக்கு தெரியும்!

தண்ணீர் எவ்வாறு நாம் பிடித்துவைக்கும் பாத்திரத்தின் உருவத்தை எடுத்துக்கொள்கின்றதோ…

அதே போல்தான் இறைவனும்!

இறைவன் நீராவியை போல அருவமாகவும் இருக்கின்றான்!
பிடித்து வைத்த பாத்திரத்தில் உருவமாகவும் இருக்கின்றான்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்… ஆனால் உருவம் மட்டுமே இறைவன் அல்ல!

இறைவன் அருவமாய் இருக்கலாம்… ஆனால் அருவம் மட்டுமே இறைவன் அல்ல!

இதனை நாம் உணர்ந்துகொள்ளவே உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத அருவுருவம் என்னும் ஒரு குறியீடு…

வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்!
அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!

லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்… மனம் குவியும்…

அதன் Geometry அப்படி! எவ்வாறு மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப்படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு என்றே சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப்பெற்றது!

சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்!
எனவே, அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக உள்ளது!

லிங்கம்=லிங்+கம்

லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (Merge)

கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (Emerge)

இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது…
சிவ புராணம், ஸ்கந்த புராணம் என எல்லாவற்றிலும் லிங்கத்தை பற்றிய வரலாறு உள்ளது!

பிருகு முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு, பிரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது என்று பல கதைகள் வழங்கினாலும், அனைத்திலுமே லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை…

பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம் கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம் வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது!

“திருமூலர்” லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!

“இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே”

குறிப்பு:- தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!

சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்கின்றனர்!

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட வடிவம்!
அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு (cone) வடிவம்!

அலங்காரம் செய்யப்பட்டிருந்தால், சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது…

அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம்!

அது இரண்டு பாகமாக இருக்கிறது…

மேலே உருளையான(cylinder) பாகமாக இருப்பது லிங்கம்! அது சிவ சொரூபம்…

அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகமாக இருப்பது ஆவுடையார்! அது சக்தி சொரூபம்…

பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்!
திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்!

ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு…
இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும், காரணமாகவும் அமைந்து விட்டது!

யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!

“ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம காயனக தேவகீ நந்தன ஸ்ரஷ்டா”
என விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கூட “ஆத்ம யோனி” என்று வரும்!

“ஆத்ம யோனி” என்பது ஆத்மா செல்லும் பாதை…

“ஆக்கல்-அளித்தல்-அழித்தல்” என்னும் முத்தொழிலில், எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge), லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)! இதுவே எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!

எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது! மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு…

நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான்!
அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும்…

பகுத்தறிவுப் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்,
இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான்!

திருப்பெருந்துறையில் மணிவாசகர் ஆலயத்தில் வெறும் ஆவுடையார் மட்டும் தான்… மேலே லிங்கமே இருக்காது!

வைத்தியநாதத்தில் லிங்கம் மட்டும் தான்… கீழே ஆவுடையாரே இருக்காது!

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினால் அவன் அருளைப் பெறலாம்.
“சிவலிங்கம்” என்பது வெறும் காமம் அல்ல… அருட்பெருஞ்ஜோதியாகும்
*லிங்க வகைகள்*
சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

*சுயம்பு லிங்கம்*- 🌿 🌹
இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம்

*தேவி லிங்கம்* – 🌿 🌹
தேவி சக்தியால் வழிபடபட்ட லிங்கம்.

*காண லிங்கம்* – 🌿 🌹
சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

*தைவிக லிங்கம்* – 🌿 🌹
மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட லிங்கம்.

*ஆரிட லிங்கம்* – 🌿 🌹
அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

*இராட்சத லிங்கம்* – 🌿 🌹
இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

*தெய்வீக லிங்கம்* – 🌿 🌹
தேவர்களால் பூசை செய்யப்பட்டு முனிவர்களின் தவத்தினால் பூமிக்கு வந்த இலிங்கம்

*அர்ஷ லிங்கம்* – 🌿 🌹
ரிஷிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்கு உருவாக்கிய இலிங்கம்

*அசுர லிங்கம்* – 🌿 🌹
அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.

*மானுட லிங்கம்* / மனுஷ்ய லிங்கம் –🌿🌹
மனிதர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்

*மாணி மாய லிங்கம்* – 🌿 🌹
இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்

*தாமரமய லிங்கம்* – 🌿 🌹
சூரியனால் வழிபட்டப்பட்ட இலிங்கம்

*முக்தி இலிங்கம்* – 🌿 🌹
சந்திரனால் வழிபடப்பட்ட இலிங்கம்

*ஹேம இலிங்கம்* – 🌿 🌹
குபேரனால் வழிபடப்பட்ட இலிங்கம்

இவற்றில் மனுஷ்ய இலிங்கமானது தொன்னூற்று வகையாக உள்ளதென *மகுடாகமம்* எனும் சைவ ஆகமம் கூறுகிறது.

*க்ஷணிக லிங்கம்* – 🌿 🌹
தற்காலிக வழிபாட்டிற்கு மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கங்கள்.

*வர்த்தமானக லிங்கம்* – 🌿 🌹
பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், ருத்ர பாகம் அவைகளைவிட இருமடங்கும் இருக்கும் இலிங்கங்கள்.

*ஆத்ய லிங்கம்* – 🌿 🌹
பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் இலிங்கங்கள்.

*பஞ்ச லிங்கங்கள்*..🌿🌹

சிவபெருமான் சதாசிவ மூர்த்தி தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார்.இவை பஞ்ச லிங்கங்கள் எனவும் அறியப்படுகின்றன.

சிவ சதாக்கியம்
அமூர்த்தி சதாக்கியம்
மூர்த்தி சதாக்கியம்
கர்த்திரு சதாக்கியம்
கன்ம சதாக்கியம்

*பஞ்சபூத லிங்கங்கள்* ..🌿🌹

நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆன லிங்கங்கள் பஞ்சபூத லிங்கங்கள் எனப்படும்.

அப்பு லிங்கம்
தேயு லிங்கம்
ஆகாச லிங்கம்
வாயு லிங்கம்
அக்னி லிங்கம்

*முக லிங்கங்கள்* ..🌿🌹

ஏக முக லிங்கம்
இரு முக லிங்கம்
மும் முக லிங்கம்
சதுர் முக லிங்கம்
பஞ்ச முக லிங்கம்

*ஆறுவகை லிங்கங்கள்*..🌿🌹

திருமூலர் தனது நூலான திருமந்திரத்தினுள் ஆறுவகையான லிங்கள் பற்றி குறிப்பிடுகின்றார்,

அவையாவன 🌿🌹

அண்ட லிங்கம்,
பிண்ட லிங்கம்,
சதாசிவ லிங்கம்,
ஆத்ம லிங்கம்,
ஞான லிங்கம்,
சிவ லிங்கம்

என்பவனவாகும்.

இவற்றில் அண்ட லிங்கம் என்பது உலகத்தினைக் குறிப்பதாகும்,

பிண்ட லிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும்,

சதாசிவ லிங்கம் என்பது சிவனையும் ஆதி சக்தியையும் இணைந்து உருவமாக கொள்ளுவதாகும்,

ஆத்ம லிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும்,

ஞான லிங்கம் என்பது இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும்,

சிவலிங்கம் என்பது பொதுவான இறைவழிபாட்டிற்குறிய குறி.

*பிற லிங்க வகைகள்* …🌿🌹

கந்த லிங்கம்
புஷ்ப லிங்கம்
கோசாக்ரு லிங்கம்
வாலுக லிங்கம்
யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம்
சீதாகண்ட லிங்கம்
லவண லிங்கம்
திலாப்சிஷ்த லிங்கம்
பாம்ச லிங்கம்
கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம்
வன்சங்குர லிங்கம்
பிஷ்டா லிங்கம்
ததிதுக்த லிங்கம்
தான்ய லிங்கம்
பழ லிங்கம்
தாத்ரி லிங்கம்
நவநீத லிங்கம்
கரிக லிங்கம்
கற்பூர லிங்கம்
ஆயஸ்காந்த லிங்கம்
மவுகித்க லிங்கம்
ஸ்வர்ண லிங்கம்
ரஜத லிங்கம்
பித்தாலா லிங்கம்
திராபு லிங்கம்
ஆயச லிங்கம்
சீசா லிங்கம்
அஷ்டதாது லிங்கம்
அஷ்ட லோக லிங்கம்
வைடூர்ய லிங்கம்
ஸ்படிக லிங்கம்
பாதரச லிங்கம்
இவ்வாறு பல சிவ லிங்கவடிவங்கள் உண்டு🔥🔥அன்பே சிவம்🔥

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »