கொரோனா சித்த மருந்து


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*கொரோனா சித்த மருந்து !*
————————————————–

*யார் சொன்னது கொரோனா வைரசிற்கு மருந்து இல்லை என்று 🙄*

*நவீன உலகம் வேண்டுமானால் கண்டுபிடிக்காமல் இருக்கலாம் 🧐*

*கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ் குடி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மருந்தை கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளார்கள் நமக்காக 🥰*

*தன்வழிச்சுரம் : 12*

*புறவழிச்சுரம் : 52*

*மொத்த சுரத்தின் எண்ணிக்கை : 64*

*காய்ச்சலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து…*

*அதை 64 வகைப்படுத்தி…*

*நம் சித்த மருத்துவம் அத்தனைக்கும் மருந்து கண்டுபிடித்து…*

*ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன *

*கொரோனா வைரஸ் போல் வைரசால் வரும் பாதிப்புகள் புறவழிச்சுரத்தின் கீழ் வருவது, இது தொற்று மூலம் நுரையீரலை நேரடியாக பாதிக்கும் ஒரு வைரஸ்.*

*கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்றுகளுக்கும் சித்தர்கள் கண்டுபிடித்த மருந்து இதோ 👇🏽*

*கபசுரக் குடிநீர் !*
—————————–

*நூல் ஆதாரம் : சித்த வைத்திய திரட்டு*

*தேவையான மருந்துகள் !*
————————————————

*1.சுக்கு – 35 கிராம்*

*2 .திப்பிலி – 35 கிராம்*

*3.இலவங்கம் – 35 கிராம்*

*4.சிறுகாஞ்சொரிவேர் – 35 கிராம்*

*5.அக்கிரகாரம் – 35 கிராம்*

*6.முள்ளிவேர் – 35 கிராம்*

*7.கடுக்காய்த்தோல் – 35 கிராம்*

*8.ஆடாதோடை – 35 கிராம்*

*9.கற்பூரவள்ளி இலை – 35 கிராம்*

*10.கோஷ்டம் – 35 கிராம்*

*11.சீந்தில் கொடி – 35 கிராம்*

*12.சிறுதேக்கு – 35 கிராம்*

*13.நிலவேம்பு சமூலம் – 35 கிராம்*

*14.வட்டத்திருப்பி (பாடக்கிழங்கு) – 35 கிராம்*

*15.முத்தக்காசு (கோரைக் கிழங்கு) – 35 கிராம்*

*கபசுரகுடிநீர் சூரணம் செய்முறை !*
—————————————————————-

*மருந்துச் சரக்குகள் நுண்மையாகப் பொடித்த சலிக்கப்பட்ட நிலையில் ‘சூர்ணங்கள்’ என்றும், ஒன்றிரண்டாகப் பொடிக்கப்பட்டு சலிக்கப்படாத நிலையில் ‘க்வாத சூர்ணங்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.*

*க்வாத சூர்ணங்கள் சித்த மருத்துவத்தில் குடிநீர்செய்து உட்கொள்வதற்காகவே பெரும்பாலும் பயன்படுத்தப் படுவதால் “குடிநீர் சூர்ணம்” என்று வழங்கபடுகின்றன.*

*சுத்தமான உலர்ந்த சரக்குகளை ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்தால் கபசுரக் குடிநீர் சூர்ணம் தயார்.*

*இப்பொழுது இச்சூர்ணத்தை வைத்து கபசுர குடிநீர் எப்படி தயார் செய்து பயன்படுத்துவது என பார்ப்போம்.*

*கபசுரக் குடிநீர் செய்முறை !*
—————————————————

*35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் நீரில் போட்டு சிறுதீயில் காய்ச்சி பன்னிரண்டிலொன்றாய் குறுக்கி வடிகட்டி குடிநீர் எடுக்கவும்.*

*250ml கபசுரக் குடிநீர் கிடைக்கும்.*

*அளவு : சிறியவர்கள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மி.லி. வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் குடிக்கலாம்.*

*தீரும் நோய்கள் : கிருமி மற்றும் வைரசால் ஏற்படும் அனைத்து நுரையீரல் தொற்று நோய்கள் (கபசுரம்)*

*கொரோனா வைரசிற்கு இந்த மருந்தை கொடுக்கலாம் என மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய முன்னாள் இயக்குனர் திரு.ஜெகஜோதி பாண்டியன் ஐயா அவர்களும் பரிந்துரை செய்துள்ளார். இது செய்தித்தாளிலும் வந்துள்ளது (செய்தியின் படம் : இணைக்கப்பட்டுள்ளது)*

*அரசு இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி ஆய்வு செய்து வெளியிட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார் 🗣*

*நாமும் அரசு இம்மருந்தை ஆய்வு செய்து மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுப்போம் 📢🥰🙏🏽*

*நோயாளிகள் தன்னிச்சையாக அல்லாமல் இம்மருந்தை அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவர்களின் கண்காணிப்பில் எடுத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏽*

*இனி கொரோனாவை விரட்டுவோமே கபசுரக் குடிநீரால் 🤺🤺🤺*

*டெங்குவிற்கு நிலவேம்பு குடிநீர் போல் 😍 கொரோனாவிற்கு கபசுரக் குடிநீர் அரசு வழங்கட்டும் 🥰*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »