வெண்கடுகு – செரிமாணத்தை தூண்டும் மருந்து


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*வெண் கடுகில்*
*செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.*
*வெண்கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.* *அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு,* *சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.*
*இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும்.* *கருப்பை* *கோளாறுகளை சரிசெய்யும்.*
*மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும்.* *கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து,* *கருப்பைக்கு பலம் தரக்கூடியது.*

*வெண்கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம்,* *வாயுக்கான மருந்து* *தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும்.*
*பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும்*

*மேலும் வெண் கடுகில் சில ஆன்மீக மகத்துவ குணங்கள் இருக்கின்றன*

*வெண்கடுகு தூபம்*
*வெண்கடுகையும் சாம்பிராணியையும் சேர்த்து தினமும் வீட்டில் தூபம் போடுவது மிகவும் நல்லது. அப்படி நீங்கள் தினமும் வீட்டில் சாம்பிராணியோடு வெண்கடுகு சேர்த்து தூபம் போடுவதனால் வீட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி என்னென்ன நன்மைகள் உங்கள் வீட்டில் உண்டாகும் என்று விளக்கமாகக் காண்போம்.*

*தீய சக்திகள்*
*நம்முடைய வீட்டில் இருக்கும் தீய சக்திகளை அடியோடு விரட்டி அடிக்கின்ற சக்தி இந்த வெண்கடுகு தூபத்திற்கு உண்டு. ஒற்றுமையாக இருக்கின்ற வீட்டுப் பிரச்சினைகள் குடும்பத்தில் உண்டாகின்ற சின்ன சின்ன பிரச்சினைகள் மூலம் சலசலப்பும் பிரிவும் வருவது இயல்பு தான். ஆனால் அதுவே அந்த பிரிவினை நீடித்துக் கொண்டே சென்றால், அது வீட்டில் பல பிரளயங்களை உண்டாக்கும் என்பதும் நமக்குத் தெரியும். இதற்கு சில தீய சக்திகளின் பார்வைகள் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கும் இந்த தூபம் பெரும் தீர்வு தரும்.*

*கால பைரவர்*
*வெண்கடுகு* *என்பது வெண் கணங்கள் என்று சொல்வார்கள். இந்த வெண் கணங்களுக்கு மத்தியில் தான் பைரவர் குடிகொண்டிருப்பார் என்று சொல்வார்கள். அதனால் பைரவரை வழிபடுவதற்கு சமமான விஷயம் தான் இந்த வெண்கடுகு, சாம்பிராணி தூபம்.*

*எளிய பரிகாரம்*
*பிரிந்து இருக்கும் குடும்பம் ஒன்று சேருவதற்கும் வீட்டில் அமைதி நிலவவும் வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்கும் இந்த வெண் கடுகின் மூலம் ஒரு எளிமையான பரிகாரம் இருக்கிறது.* *வீடுகளில் மன அமைதியும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டுமென்றால் வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடுவது நல்லது. அதிலும் அந்த சாம்பிராணியுடன் இந்த வெண்கடுகையும் சேர்த்து வீட்டில் உள்ள அறை முழுக்க தூபம் போட்டு, அதை கடைசியில் சாமி படங்கள் வைத்திருக்கும் பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.*

*அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நடப்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அந்த நாள் முழுக்க இந்த வெண்கடுகின் மணம் வீடு முழுக்க மெல்ல மெல்ல பரவி வீட்டில் மன அமைதி வீட்டில் பரவ ஆரம்பிக்கும்.*

*இதன் சக்தி* *எப்படி சாத்தியம்*
*நீங்கள்* *நினைக்கலாம் வெண்கடுகுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்று? அது எப்படி வந்தது என்றும் சந்தேகம் இருக்கும். அதற்கான காரணங்களை சித்தர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். வெண்கடுகு என்பது சாதாரண பொருள் அல்ல. அது தெய்வீகத் தன்மை வாய்ந்தது.*

*அதனால் தான் வெண்கடுகை தேவகணம் என்றும் சொல்வார்கள். வெண்கடுகு குளிர்ச்சி தருபவையாக இருக்கும். இமயமலையைச் சுற்றிலும் காவல் புரிகின்ற பைரவருடைய தேவகணங்கள் தான் இந்த வெண்கடுகு. அதனால் தான் இது இமயமலையின் அடிவாரங்களில் மிக அதிக அளவில் விளைகின்றது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்து தீய சக்திகளையும் பைரவர் தான் அடக்கி வைத்திருக்கிறார் என்ற கருத்து உண்டு.*

*அதனால் தான் வெண்கடுகு இருக்கின்ற இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது என்று சொல்வார்கள். அதனால் தான் இந்த வெண்கடுகு புகையாக மாறுகிறபொழுது, அதற்குள் பொருந்தியிருக்கின்ற தேவ கணங்கள் தீய ஆவிகளை வீட்டில் இருந்து வெளியேற்றி விடும்.* *இதன்மூலம் வீட்டில் குலதெய்வ பலம் கூட ஆரம்பித்து விடும்*

*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »