தினசரி மூன்று முறை பிரார்த்தனை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தினசரி மூன்று முறை பிரார்த்தனையை மனதில் உள்வாங்கி *ஐந்தாம் நிலை பிரார்த்தனையான முன்கூட்டியே காட்சிப்படுத்துதலை துணை கொண்டு ஏற்கனவே நடந்துவிட்டதாக கருதி செயல்படும் நம் பிரார்த்தனைக்கு வலிமை மிக மிக அதிகம்* இதை செயல்படுத்தும் அனைவருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகள் கோடி கோடி

நான் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த சக்தி
கடவுளின் நிறைவான பஞ்ச பூத சக்தி
இந்த பிரபஞ்ச சக்தியின் வெளிப்பாடு நான்
நானே தனித்தன்மையான பிரபஞ்ச சக்தி
உடலாலும் மனதாலும் உணர்ச்சிகளாலும் நானே பஞ்ச பூத சக்தி
ஞானசக்தி சக்தியே நான்
நான் தெய்வீகச் சுடர்
நான் இறைவனின் படைப்பு
நான் இறைவனுடன் ஒன்றாக இருக்கிறேன்
நாளுக்கு நாள் என் கர்மவினைகளை சரி செய்கிறேன்
நான் இறைவனின் விருப்பத்திற்கேற்ப வாழ்கிறேன்
இறைவனின் பேரருள் பூமித்தாய்க்கு தெய்வீக ஒளி தெய்வீக சக்தி தெய்வீக அறிவு அபரிமிதமாக கொடுத்து ஆசீர்வதிக்கட்டும்
*அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக வாழ்க வையகம் வாழ்க வளமுடன்*.
*இறைவன் நாமத்தால் இப்பொழுது வினாடிக்கு வினாடி ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் ஆன்மிகத்திலும் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் எங்கள் பாரதம் வாழ்க வளர்க*
*பஞ்சபூத சக்தியின் துணையோடு எல்லாம் சாத்தியமே* அதை உணர்ந்து படைப்பாற்றலின் தாள்பணிந்து உலக மக்கள் அனைவரும் அபரிமிதமான ஆரோக்கியத்தோடும் பெரும் மகிழ்ச்சியோடும் வாழ்வதற்கு மனப்பூர்வமான எங்களது நன்றிகள்.
*தெய்வீக பேரருள் பெரு நெருப்பாக எங்களையும் எங்களை சார்ந்தவர்களையும் இந்த பூமி பந்தையும் பலப்பல அடுக்குகளாக சூழ்ந்து எங்களை பாதுகாப்பதற்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள் கோடி பிரபஞ்சமே*
எங்களது பாரதம் வாழ்க எங்களது வலிமையான பாரதம் வாழ்க ஆன்மிகத்திலும் ஆரோக்கியத்திலும் சிறந்த எங்களது பாரதம் வாழ்க
வைத்திய சாஸ்திரம் தோன்றிய எங்களது பாரதம் வாழ்க
இரக்கத்திற்கும் கருணைக்கும் பேர்போன எங்களது பாரதம் வாழ்க
*சட்ட திட்டங்களிலும் சுய ஒழுக்கத்திலும் சுய கட்டுப்பாட்டிலும் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் எங்கள் பாரத நாடு வாழ்க வாழ்க*
*அரசாங்க கட்டளையை மதித்து தங்களுக்கான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் எங்களது பாரத மக்கள் வாழ்க வாழ்க*
வந்தாரை வாழவைக்கும் எங்களது பாரதம் வாழ்க வாழ்க
எங்கள் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வீடுகளில் இருப்பதற்கு சேவை செய்யும் பொதுத்துறை சகோதர சகோதரிகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்
*கண்ணுக்கு எதிரில் தெரியும் கடவுளான மருத்துவத்துறை சகோதர சகோதரிகளுக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகள்*
நமக்காக சேவை செய்யும் அவர்களுக்கு பிரபஞ்சத்தின் பேரருள் ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்
எங்களுக்கான சேவையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளின் குடும்பமும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள் பிரபஞ்சமே
நாங்கள் அபரிமிதமான ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சமே
*நாங்கள் இந்த பாரத தேசத்தின் மக்கள் எங்கள் நன்மைக்கு என அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் கைகொடுத்து எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வோம்*
எங்களது ஒற்றுமையை இந்த உலகுக்கு பறை சாற்றுவோம்.
*இதில் எங்களுக்கு கைகொடுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் எங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் வீட்டில் பாதுகாப்பாக அனைவரும் இருப்பதற்கும் பொது இடங்களில் கூடாமல் அனைவரும் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் தங்களது இல்லங்களில் மிக மிக மகிழ்ச்சியோடு கழிப்பதற்கும் எங்களது மனப்பூர்வமான நன்றிகள் கோடி கோடி*

பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
பொதுத்துறையில், மருத்துவத்துறையில் பணியாற்றும் சகோதர சகோதரிகளுக்கு நாம் வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்து அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாப்பதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்

*இந்த பிரார்த்தனையில் மனதார ஈடுபட்டு நம்மால் முடிந்ததை இந்த உலகுக்கு செய்தோம் என்ற மன நிறைவை அனைவரும் பெறுவதற்கு நன்றி நன்றி நன்றி*

Image may contain: 1 person, close-up

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »