“சகல நோய்களின் தலைவனான “எமனை”, வெளியே சென்று வீட்டுக்குள் அழைக்காதீர்கள் – கருடபுராணம் சொல்கிறது”


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*”சகல நோய்களின் தலைவனான “எமனை”, வெளியே சென்று வீட்டுக்குள் அழைக்காதீர்கள் – கருடபுராணம் சொல்கிறது”*👹👹

கருடபுராணம், *”எமனை சகல நோய்களின் தலைவன் என்கிறது”*

கருடபுராணத்தில் எமனுடைய இருப்பிடம் பற்றி, திருமால் கருடனிடம் கூறுகிறார்

கருடா!! இனி யமலோகத்தின் தன்மையைச் சொல்லுகிறேன், கேட்பாயாக!!,

*”தென் திசைக்கும் நிருதியின் திசைக்கும் நடு மையத்தில் யமபுரியானது உறுதியாகவும் தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருவராலும் அழிக்க முடியாத வண்ணம் அமைந்திருக்கும்”*

*“அந்தப் பட்டினத்திற்கு நடுவில் சதுரமாய் நூறு யோசனை உயரமும் நிறைய சன்னல்களை உடையதுமான, சுவர்ண மயமான எமதர்மராஜனின் அரண்மனை அமைந்திருக்கும்”*

*“அந்த அரண்மனையின் உள்ளே பத்து யோசனை அகல நீளமுள்ள உறுதியான வைரத்தாலான தூண்கள் நிறுத்திய மண்டபமும் மாளிகையும் அமைந்திருக்கும்”*

*”அங்கு மிக அழகுடையதும் மென்காற்று வீசுவதுமான எப்போதும் ஆடலும் பாடலும் இடைவிடாமல் புழங்கும் ஒரு திவ்விய மண்டபம் இருக்கும்”*

*“அந்த மண்டபத்தில் யமதூதர்கள் கரங்குவித்த வண்ணம் எமனை வணங்கிக் கொண்டு ஒருபுறம் நின்று கொண்டிருப்பார்கள்”*

*”இன்னொரு புறம் நோய்கள் எல்லாம் கோர உருவத்துடன் எமனை வணங்கியபடி நின்று கொண்டிருக்கும்”*

*”அவர்களுக்கு நடுவில் கண்டவர்கள் அஞ்சும்படியான ரூபத்தோடு மகிழ்ச்சியாக யமதர்மன் வீற்றிருப்பான்”* 👹👹

*“அவன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு அருகில் சித்திர குப்தனுடைய அரண்மனை இருக்கிறது”*

*“அவன் அனைத்து ஜீவன்களின் பாவ புண்ணியங்களையும் எழுதும் கணக்கில் ஒரு சிறு பிழையும் உண்டாகாது”*

அந்த சித்திரகுப்தனுடைய அரண்மனைக்குக்

*”கிழக்குத் திசையில் ஜுரத்துக்கும், தென்திசையில் சூலைநோயோடு வைசூரி நோய்க்கும், மேற்குப் பக்கத்தில் காலபாசத்தொடு கூடிய அஜீரணத்துக்கும் அருசிக்கும், வடக்குப் பக்கத்தில் வயிற்று வலிக்கும், தென் கிழக்கில் மயக்கத்துக்கும் தென் மேற்கில் அதிசார நோய்க்கும், வடமேற்கில் ஜென்னிக்கும் தனித்தனியே அறைகள் அமைக்கப் பட்டிருக்கும்”* 😨😨

*“அந்த நோய்கள் யாவும் தங்கள் தலைவனான யமனுடைய உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டே அம்மனைகளில் வசித்திருக்கும்”*

*”யாருக்கு எப்போது எந்தநோயை ஏற்படுத்தி அவரது உடலில் இருந்து ஜீவனை பிரிக்க தலைவனான எமன் ஆணை இடுகிறானோ?? அந்த நோய் அந்த மனிதனை போய் பற்றி மரணத்தை உண்டாக்கும்”* என்கிறது கருடபுராணம்; 😨

*”இப்படி எமனின் கட்டளைக்கு உட்பட்ட ஒரு ஜ்வர வியாதிதான் “கொரோனா” என்பதும் கூட”*

இதிலிருந்து தப்பிக்கத்தான் அரசாங்கம் யாரையும் வீட்டை விட்டு வெளிய வராதீர்கள் என்று கட்டளை இடுகிறது!!

*”அதனை மீறி நீங்கள் வெளிய வந்து, தெருவை விசிட் அடிக்கிறேன என்று கூறி எமனை வீட்டு்குள் அழைத்து சென்று எமலோகத்திற்கு விசிட் அடித்து விடாதீர்கள்!!”*

*”Stay In Home for 21 Days”*

நம் உயிரும் முக்கியம், நம்மை சேர்ந்தவர்கள் உயிரும் முக்யம்!! வீணாக வெளியே சென்று எமனை உள்ளே அழைத்து வராதீர்கள் 🤷🏻‍♂🐃👺

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »