சிவ அபிஷேக பலன்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிவ அபிஷேக பலன்கள்!

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்
.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்

7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.

9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.

13) கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர ப்ராப்தி கிட்டும்.

14) ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான தாரித்ரியம் நசிக்கும்.

15) ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப கிடைக்கும்.

16) வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

17) அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.

18) திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம் உண்டாகும்.

19) கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள் இல்லாமல் போவர்.

20) நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி கிட்டும்.

21) கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.

22) நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம், கோவ்ருத்தி கிட்டும்.

23) மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

24) மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

ஓம் நமசிவாய..

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »