பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் சரியான முறை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மங்களகரமான பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த மஞ்சள். அதுமட்டுமல்லாமல் இது ஒரு கிருமி நாசினி. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாகவே பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது என்பது மிகவும் நல்ல ஒரு விஷயம். எந்தவொரு கிருமித் தொற்றும் பெண்களை அண்டக் கூடாது என்பதற்காகவும், மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அந்த காலத்திலிருந்தே பெண்கள் இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமங்கலிப் பெண்கள் குளித்த பின்பு, முறையாக எப்படி மஞ்சள் தேய்த்துக் குளிக்கவேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள தான் இந்த பதிவு.

வளர்ந்து வரும் நவநாகரீக காலமான இந்த காலகட்டத்தில் நிறைய பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை பின்பற்றுவது இல்லை. ஆனால் சில பெண்கள் இன்றளவும் மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். நம்முடைய அம்மாக்கள் எல்லாம் மஞ்சள் தேய்க்காமல் குளிக்கவே மாட்டார்கள். பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இப்படி சிறு வயதில் இருக்கும் பெண்களுக்கு மஞ்சள் நிறம் வெளியில் தெரியாமல் இருக்க வேண்டுமென்றால் கஸ்தூரி மஞ்சளை தேய்த்து குளித்து கொள்ளலாம். அதில் மஞ்சள் நிறம் அதிக அளவில் வெளியே தெரியாது. முடிந்தவரை மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இல்லாத பெண்கள், நீங்கள் இஷ்டப் பட்டால் நாளையிலிருந்து இந்த பழக்கத்தை கொண்டு வரலாம். உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சரி. நாளையிலிருந்து மஞ்சளை தேய்த்துக் குளிக்க ஆரம்பித்து விட்டீர்கள். எப்படி குளிப்பது? நீங்கள் மஞ்சளை, கல்லில் இழைத்து குளிப்பவர்கள் ஆக இருந்தால், முதலில் நீங்கள் பயன்படுத்தப்படும் அந்த கல்லையும், அந்த மஞ்சளையும் கழுவிவிட்டு தான் பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்துவிட்டு இறுதியாக மஞ்சள்தூள் ஆக இருந்தாலும், குழைத்த மஞ்சளாக இருந்தாலும் முதலில் உங்கள் உள்ளங்கைகளில் எடுத்துவிட்டு, அந்த மஞ்சளை கால் பகுதியிலிருந்து தான் மேல் பகுதிக்கு தேய்த்து வரவேண்டும்.

பலபேர் முதலில் முகத்தில் தேய்த்து விட்டு, அதன் பின்பு கை, கால்களில் தேத்துக் கொள்வார்கள். இப்படி செய்வது தவறு. முதலில் கால் பகுதி, கைப்பகுதி அதன் பின்புதான் கழுத்து, முகம். இதுதான் சரியான முறை. இதைப்போல் நீங்கள் தலைக்கு குளிக்கும் தினங்களில் மஞ்சளை தேய்த்த பின்பு தலைக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. அதாவது முதலில் உங்களது தலையை முழுமையாக சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் தேய்த்து பின்பு, உடம்பு பகுதியில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் தலைப் பகுதியில் தண்ணீர் ஊற்றி குளிக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சுமங்கலி பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும்போது கட்டாயம் உங்கள் தாலிக்கும் மஞ்சள் தேய்ப்பது அவசியம். சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மஞ்சள் தேய்த்து குளிக்கலாமா என்ற சந்தேகம் இருக்கிறது. கட்டாயம் மாதவிடாய் காலங்களிலும் மஞ்சள் தேய்த்து பெண்கள் குளிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

சுமங்கலிப் பெண்களாக இருந்தாலும், சிறிய வயது பெண்களாக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் மஞ்சள் தேய்த்து குளிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும். சிலருக்கு மஞ்சள் தேய்த்தால் அலர்ஜி வரும் என்று மருத்துவர்களின் பரிந்துரை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தவிர்த்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »