வாழ்வில் வளம் பெற புட்லூர் அங்காளம்மன் கோவில்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் புட்லூர் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு பக்தர்கள் திரண்டு வந்து அம்மன் அருளினைப் பெற்றுச் செல்கின்றனர்.

புட்லூர் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமையானது. ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பாகும். அன்று பெண்கள் பெருமளவில் திரண்டு வந்து அன்னையை வணங்கிச்செல்வர்.

அன்று வழிபட்டால் புண்ணியங்கள் சேரும் என்பது ஐதீகம். ஒவ்வொரு அமாவாசை தினமும் புட்லூர் அங்காளம்மன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

பொதுவாக இந்த ஆலயம் காலை 6 மணிக்கு திறக்கப்படும். மதியம் ஒரு மணி வரை திறந்திருக்கும். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். கோயில் நடை, இரவு 7 மணி 30 நிமிடங்கள் வரை திறந்திருக்கும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான புறநகர் மின்சார ரெயில்கள் இந்த வழியாகச் செல்கின்றன.

அவற்றில் புட்லூர் ரெயில் நிலையத்தில் இறங்கினால் ஷேர் அட்டோவில் கோயிலுக்குச் செல்ல முடியும்.

புட்லூர் தலத்துக்கு தினமும் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த எண்ணிக்கை சுமார் 25 ஆயிரமாக உயர்ந்து விடுகிறது.

புட்லூர் அங்காளம்மன், பக்தர்கள் கேட்டதை வாரி வழங்கும் இயல்புடையவள். எனவே, புட்லூர் சென்று பக்திப் பரவசத்துடன் அன்னையை வழிபட்டு வாழ்வில் எல்லா வளம் பெறலாம்.

*அம்மன் உருவான கதை*

ஒரு குடியானவன் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடனாகபெற்று அதை திருப்பமுடியாமல் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார்.

அந்த இரக்கமற்ற செல்வந்தர் அதற்க்கு பதிலாக ஒரு கரடுமுரடான நிலத்தை உழுது செப்பநிடுமாறு அந்த குடியானவனை மிரட்டினார் .

அவர் சொல்படி அந்த குடியானவன் நிலத்தை உழுத போது ஓரிடத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்டது.

அவ்விடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கே ஒரு கர்பிணிப்பெண் வடிவில் புற்று ரூபமாக அம்மன் கானக்கிடைக்கப்பெற்றாள்.

உடனே அவ்வூர்மக்கள் ஒரு கோவிலை எழுப்பி “அங்காளபரமேஸ்வரி” என்ற திருநாமத்துடன் அம்பாளை வழிபடலானார்.

இதனால் அவ்விடமும் புட்லூர் என்று பெயர் பெற்றது. புற்று அம்மனின் தலைக்குபின்னால் சிவன் லிங்க வடிவிலும் அம்பாள் சிலையும் விநாயகர் சிலையும் பிரதீஷ்டிக்கப்பட்டுள்ளது.

எந்த சக்தி ஸ்தலத்திலும் இல்லாத ஒரு ஆச்சர்யம் இங்கே அமைந்துள்ளது. சிவன் உள்ளே இருப்பதால் சக்தியின் சிம்ம வாகனத்திற்கு பதில் நந்தியை இங்கே காணமுடிகிறது.

அம்மனுக்கு இங்கே பக்தர்கள் கொண்டு வரும் மஞ்சளும் குங்குமமும் வளையலும் சாத்தப்படுகிறது. எலுமிச்சையுடன் வேப்பிலையும் சேர்த்து கோர்க்கப்பட்ட மாலை இந்த அம்மனுக்கு மிக விசேஷமாக அணிவிக்கபடுகிறது .அம்மனின் காலடியில் வைத்த எலும்மிச்சை கனியும் வளையல்களும் பிரசாதமாக வழங்கபடுகிறது

*குழந்தை பாக்கியம் பெற*

குழந்தை பேறற்ற பெண்கள் இங்கே 9 வாரங்கள் தொடர்ந்து வந்து கோவிலில் நீராடி 11 முறை வெளிப்ரகாரத்தில் அமைந்திருக்கும் புற்றுடன் கூடிய ஸ்தல விருக்க்ஷமான வேப்பமரத்தையும் சேர்த்து சுற்றி வந்து கடைசி சுற்றில் வேப்பமரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் கை மேல் பலனளிப்பாள் இந்த புட்லூரம்மன்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »