குருவின் அருளால் – ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*குருவின் அருளால் – ஒழிகிறான் கொரோனா என்னும் மாயன்*

இன்று 30_3_2020 திங்கள் (பங்குனி 17) காலை 4.20 மணி முதல் குருபகவான் தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்கு அதிசாரம் ஆகிறார். இந்த அதிசார குரு பகவான் உச்ச செவ்வாயின் சேர்க்கையினால் நீச்ச பங்க இராஜ யோகத்தை அடைந்து பூமியை விரைவில் ரக்ஷிக்க உத்திரவாதம் தருகிறார். மிதுன இராகுவின் அயன சயன விரயபாவமான கடகத்திற்கு இதனால் குருமங்கள திருஷ்டி உண்டாகிறது. காலபுருஷ பாவத்தில் இது உலகுக்கு நன்மை தரும். இது நமக்கு நல்லதே.

இந்த குரு + செவ்வாய் கூட்டணி என்பது நமக்கு தெம்பு தருவது. இந்த நீச்ச பங்க இராஜ யோக குருவின் அருள் , கெட்ட காலத்தை சக்தி இழக்கவைக்கும். பூமி முழுவதும் விஷவீரியம் உள்ள இந்த நேரத்தில் குருவின் பொற்கதிர்கள் அவை அனைத்தையும் தூசென விரட்டிவிடும்.

குருவின் காரகத்துவ விஷயங்களை அதிகம் பயன்படுத்துங்கள்.

ஒவ்வொருவர் வீட்டிலும் வாசல் திரைச்சீலை மஞ்சள் நிறத்தில் தொங்க விடலாம். மஞ்சள் நனைத்த துணியும் நல்லதே. வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு நன்றாகக் கற்பூரம் திருஷ்டி சுற்றிப்போடுங்கள்.

வீட்டுக்குள் சந்தன வாசம் அதிகம் இருப்பதாக பார்த்துக்கொள்ளலாம்.

நெற்றியில் சந்தனம் இட்டுக்கொள்ளலாம்.

இயன்றவர்கள், கழுத்தில் சந்தன மாலை அணியலாம்.

பீரோவுக்குள் சும்மா இருக்கும் தங்கச் சங்கிலியை எடுத்து கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

வீட்டுக்குள் மற்றும் வீட்டு வாசலில் நன்றாக மஞ்சள் நீர் தெளிக்கலாம்.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகள் அணிவதால் நமக்கு மங்கலமும் பலமும் உண்டாகும்.

வஜ்ஜிராசனம் போட்டபடி, கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு ஹனுமன் இராசிக்கு அதிபதியான குருவின் அருள் வேண்டி தியானியுங்கள்.

வீட்டில் மூலைக்கு மூலை கர்ப்பூரத்தை சற்று தூள் செய்து போடுங்கள். கற்பூர மணத்தை நன்கு நுகருங்கள். இது ஆக்சிஜனை அதிகம் தரும். கற்பூர ஆரத்தியை உள்ளங்கைகளால் தொட்டு இரண்டு கண்களிலும், உச்சந்தலையிலும், தொண்டையிலும் ஒற்றிக்கொண்டு தடவிவிடுங்கள். இதன் பாதுகாப்பு என்பது காலம்காலமாக நாம் நமது பாரம்பரியத்தில் செய்து வந்ததுதான்.

பாம்பினைத் தனது கூரிய அலகினால் கொத்திக் கொத்தித் தூக்கிப்போடுகின்ற , கால்களின் கூரிய நகங்களால் குத்திக்குதறும் முருகப்பெருமானின் வாகனமான மயிலை உங்கள் வீட்டுக்கு ஒவ்வொருவரும் அழையுங்கள். அதுவரும். மயிலை வேண்டி வேண்டி அழைக்க மயில் வந்து அருள் புரியும். தன்மீது முருகப்பெருமானையும் தாங்கிக்கொண்டு வரும். சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலனின் அருள்… பாம்பினால் ஏற்பட்ட இந்த கிருமி நோயை முற்றிலும் அழிக்க உதவும். ஆகவே, ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அவர்கள் திருவாய் அருளிய “பகை கடிதல் ” என்னும் மந்திரத்தை இடைவிடாமல் ஜெபியுங்கள். வாய்விட்டு சப்தமாக. உதடுகளில் முணுமுணுத்தபடி. மனம் ஒன்றி வாய்க்குள்ளேயே மனதால் படித்தபடி. எப்படி வேண்டுமானாலும்.

மிக சக்திவாய்ந்த அருள் அலைகளை ஏற்படுத்தக்கூடிய கந்த சஷ்டி கவசத்தை வீட்டில் பாராயணம் செய்யுங்கள். கந்தம் என்றால் ஒருங்கிணைத்தல் என்று பொருள். இந்த கந்த சஷ்டி கவசமானது உலகத்தின் நேர்மறை காந்த சக்தியை ஒருங்கிணைத்து வலு கூட்டி எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும்.

மாயமாக நின்று போர் புரிந்த சூரபத்மன் என்னும் அசுரனை அழித்து மக்களை எல்லாம் காத்து , விஸ்வரூபம் காட்டி அருளிய முருகப்பெருமானின் அருள்… இப்போதும் கண்ணுக்குத் தெரியாத மாயக் கிருமியாக இருந்துகொண்டு நம்மை எல்லாம் துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இந்தக் கொரோனா வைரஸையும் அழித்து மறுபடியும் அருள் செய்யும். வெற்றிவேல் இப்போதும் நம்மைக் காத்து அருளும். அவனையே சரணடைவோமாக.

கண்டிப்பாக விரைவில் நல்ல செய்தி வந்ததற்காக நாம் இன்னொருமுறை கைகள் தட்டி மகிழும் நேரம் வரும் விரைவில் வந்துவிடும்.

வேல் வேல் வெற்றிவேல் !

*சிவ சிவ சிவாயநம*

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »