சனிபகவானுக்கு உகந்த விரதங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சனிபகவானுக்கு உகந்த விரதங்கள்

ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் பூரண உபவாசம் இருந்து
காகத்திற்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யலாம்.

ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் ஒருவேளை உணவோடு விரதம் இருந்து, சனிபகவானின் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.

சிறிது எள்ளை பொட்டலமாக கட்டிக்கொள்ள வேண்டும். தினசரி இரவு படுக்கும்போது, அதை தலைக்கு அடியில் வைத்து படுக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு அன்னம் இடலாம். 9 நாள் அல்லது 48 நாள் அல்லது 108 நாள் என்று இந்த பரிகாரத்தை சனிதோஷத்தின் தீவிரத்தைப் பொறுத்து செய்ய வேண்டும்.

ஒரு முழுத் தேங்காயை சனிபகவான் சன்னதியில் சனிக்கிழமை அன்று இரண்டு பகுதியாக்கி, அதில் நல்லெண்ணை விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம். அல்லது, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சனிபகவானுக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்து, கருப்பு அல்லது நீல வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடை மாலை செய்து வழிபாடு செய்து, அவற்றை அன்னதானம் செய்ய வேண்டும்.

சனிபகவனுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகளை சிறப்போடு செய்யலாம். அதைத் தொடர்ந்து மண்டல பூஜை செய்தும் பயன் பெறலாம்.

எள்ளை சுத்தம் செய்து வறுத்து, வெல்லம், ஏலக்காய் பொடியுடன் சேர்ந்து இடித்து திலசூரணம் செய்து கொள்ள வேண்டும். அதை வெங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து விநியோகம் செய்யலாம்.

ஆஞ்சநேயர், தர்மராஜன், பிரஜாபதி ஆகியோரையும் சனிதோஷம் விலக ஆராதனை செய்யலாம்.

அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ அர்ச்சனைகள் செய்வது மிகவும் நல்லது.

தினசரி நவக்கிரகம் மற்றும் சனிபகவான் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். – இந்த பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றை, சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செய்து வந்தால், அந்த தோஷத்தில் இருந்து எளிதில் விடுபட்டு விடலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »