புத்தரின் வாரிசு – போதி தர்மர்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🎪 போதிதர்மர் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பாக

தென்னிந்திய அரசனுக்கு மகனாக பிறந்தவர்

அங்கு பல்லவர்கள் என்ற பெரும் சாம்ராஜ்யம் இருந்தது

அவர் தனது தந்தைக்கு மூன்றாவது மகன் ஆவார்

அதிபுத்திசாலியாக இருந்த அவர்

உலக விஷயங்களை கண்டு தனது ராஜ்யத்தை துறந்தார்

அவர் உலகவிஷயங்களுக்கு எதிரானவர் கிடையாது

ஆனால்

அவர் முக்கியத்துவம் இல்லாத உலக விஷயங்களில்

தனது நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை

அவரது முழுக் கவனமும் தன்னுடைய சுய தன்மையைப் பற்றி அறிவதாகவே இருந்தது

ஏனென்றால்

அது தெரியாத நிலையில் நீங்கள் இறப்பை முடிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் ஆகும்

உண்மையில் உண்மையைத் தேடிய அனைவருமே இறப்பை எதிர்த்துப் போராடினர்

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், “இறப்பு இல்லையென்றால், மதமும் இருக்காது“ என்று அறிவித்தார்

அதில் சிறிது உண்மையும் இருக்கிறது

நான் இதனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளவில்லை

ஏனெனில்

மதம் என்பது ஒரு பரவலான அமைப்பாகும்

இது இறப்பை மட்டுமல்லாமல் பேரின்பம், உண்மை, வாழ்க்கையின் பொருள், இன்னும் பிற பொருள்களை தேடுவதாக உள்ளது

ஆனால் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னதும் சரியே

இறப்பு இல்லையென்றால், மிகச் சிலரே, மிக அரிதாகவே மக்கள் மதத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருந்திருப்பர்

மரணம் என்பது மதத்திற்கு பெரும் ஊக்கமாக அமைந்தது

போதிதர்மர் தனது ராஜ்யத்தை துறந்தார்

அதற்கு முன்னதாக தன் தந்தையிடம்,

“உங்களால் என்னை மரணத்திலிருந்து பாதுகாக்க முடியாது என்றால்,

தயவுசெய்து என்னை தடுக்காதீர்கள்

மரணத்திற்கு பின்னால் என்னவென்று தேடுவதற்கு என்னை அனுமதியுங்கள்“ என்று சொன்னார்

அந்தக் காலம் மிகவும் அழகிய காலமாகும்

குறிப்பாக கிழக்கு நாடுகளில் அழகிய காலமாக இருந்தது

அவரது தந்தை ஒரு நிமிடம் யோசித்தார்.

“நான் உன்னை தடுக்க மாட்டேன்

ஏனென்றால்

என்னால் உனது மரணத்தை தடுக்க முடியாது

நீ எனது ஆசீர்வாதத்தோடு உனது தேடுதலை துவக்கலாம்

என்னுடைய பற்று காரணமாகவே நீ எனக்குப் பின்னால் இந்த பல்லவ சாம்ராஜ்யத்தை அரசாள்பவனாக இருப்பாய் என்று நினைத்தேன்

ஆனால்

நீ அதற்கு மேலான ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளாய்

நான் உன் தந்தை,

என்னால் எப்படி உன்னை தடுக்க முடியும்..???“ என்று சொன்னார்

மேலும்,

“நீ நான் எதிர்பார்க்காத வகையில்

ஒரு சிறு கேள்வியை கேட்டுவிட்டாய்

‘உங்களால் எனது மரணத்தை தடுக்க முடியும் என்றால் நான் அரண்மனையை விட்டு போகமாட்டேன்

ஆனால் எனது மரணத்தை தடுக்க முடியாது என்றால்,

என்னை தடுக்காதீர்கள்‘ என்று சொல்லிவிட்டாய்

இதன் மூலம் யாரும் போதிதர்மரின் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளலாம்

இரண்டாவதாக,

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்

அவர் கௌதம புத்தரை பின்பற்றுபவர் ஆவார்

சில விஷயங்களில் இவர் புத்தரையும் மிஞ்சிச் செல்கிறார்

உதாரணமாக

புத்தர் தனது சன்னியாசிகளாக பெண்களைச் சேர்த்துக்கொள்ள அஞ்சினார்

ஆனால் போதிதர்மர் ஒரு ஞானம் பெற்ற பெண்ணாலேயே தூண்டப்படுபவராக இருந்தார்

அவரது பெயர் பிரக்யதாரா

ஒருவேளை மக்கள் அவரது பெயரை மறந்திருக்கலாம்

போதிதர்மர் காரணமாகவே மக்கள் இன்றும் அவரை நினைவில் வைத்துள்ளனர்

ஆனால் பெயர் மட்டும்தான் உள்ளது

அவரைப் பற்றி வேறு எந்த விஷயமும் நமக்குத் தெரியவில்லை

அவர்தான் போதிதர்மரை சீனாவிற்கு செல்லச் சொன்னார்

புத்த மதம் போதிதர்மர் செல்வதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டது

இதனை ஒரு அதிசயம் என்றே சொல்லலாம்

இதுபோல முன்பு எப்போதும் நடந்ததே இல்லை

புத்தரின் போதனைகளை சீன மக்கள் அனைவருமே உடனே ஏற்றுக்கொண்டனர் 🎪

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »