நாகலிங்க மரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நாகலிங்க மரம் கோவில்களில் காணலாம்
அழிந்து மரங்களில் நாகலிங்க மரமும் ஒன்று,நாகலிங்க மரம் சராசரியாக 35 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது.
நாகலிங்க மரம் ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. அடிமரத்தில் இருந்து நேரடியாகக் கிளைகள் இல்லாமல் இருக்கும் மரம்.
நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூட பூக்கும்.
இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்ட மலர்கள் நறுமணம் வாய்ந்தவை.
நாகலிங்க மரத்தின் காய்கள் உருண்டையாக பந்து போன்று காணப்படும்.
நாகலிங்க மரத்தின் உலர்ந்த பழங்கள் கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும்.
பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது.
நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.
நாகலிங்க மரங்களை காப்போம்!! அழிந்து வரும் நாகலிங்க மரங்களை நடவு செய்வோம்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »