தக்ஷிணாமூர்த்தி தத்துவம் & 12 மாத தெய்வங்களின் மந்திரங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தக்ஷிணாமூர்த்தி தத்துவம்

பிரம்மத்தால் உண்டாக்கப்பட்ட சகல அறிவையும் தன்னுள்ளே கொண்டவர் என்பதே தக்ஷிணாமூர்த்தி தத்துவம். அந்த தத்துவமே மூர்த்தி சொரூபமாக தக்ஷிணாமூர்த்தியாக சித்தரிக்கப்படுகின்றது. தக்ஷிணாமூர்த்தியாகியவர் முற்றறிவுடையவர் என்பவராவர். அறிவு, தெளிவு, ஞானத்தை அரூபமாயிருந்து உலக உயிர்களுக்கு அருள்பவர் என்று கூறுவர் தக்ஷிணாமூர்த்தியை. குரு தக்ஷிணாமூர்த்தியாகிய அஞ்ஞானத்தைப் போக்குபவர். அகோர வெளிப்பாடலான இவர் அஞ்ஞானமான அகோரத்தை அறுத்தெறிபவராவார். அஞ்ஞானத்தை அறுத்தெறியும் எந்த ஒரு தத்துவமும் குரு தத்துவமாகவே கருதப்படுகிறது, அந்தத் தத்துவமே உருவமாக இருந்து வழி நடத்தும்போது அதுவே ஆச்சார்யம் எனப்படுகிறது.

குரு தக்ஷிணாமூர்த்தி எண்ணிலடங்கா வித்தைகளுக்கு ஆதிகுருவாக கருதப்படுபவர். அந்த ஆதி குரு பிரம்ம சொரூபமாகும், அந்த பிரம்மமே பரமேஷ்டிகுருவாகவும் அவரிடமிருந்து பரமகுருவும் அவரிடமிருந்து குருவும் உற்பத்தியாகின்றனர்.

பரமேஷ்டிகுரு, பரமகுரு, குரு என்ற மூன்று தத்துவமும் தக்ஷிணாமூர்த்தியின் அம்சங்களே. உலக உயிர்களுக்கு ஞானத்தைப் வழங்கும் தக்ஷிணாமூர்த்தியின் பலவித ரூபபேதங்கள் பின்வருவன்வாறு கூறப்படுகிறது.

1. மேதா தக்ஷிணாமூர்த்தி – தெளிவு ஞானத்தை பெறுக.
2.வீணாதர தக்ஷிணாமூர்த்தி – இசைஞானம் பெறுக.
3. சாம்ப தக்ஷிணாமூர்த்தி
4.கீர்த்தி தக்ஷிணாமூர்த்தி
5. சம்ஹார தக்ஷிணாமூர்த்தி
6. அபஸ்மர நிவர்த்திக தக்ஷிணாமூர்த்தி – புத்தி தெளிவு உண்டாக, வலிப்பு நோய் நீங்க.
7. ஔடத தக்ஷிணாமூர்த்தி – மரணமில்லா பெருவாழ்வு வாழ.
8. லக்ஷ்மி தக்ஷிணாமூர்த்தி – நித்திய பொலிவு பெற.
9. வீர தக்ஷிணாமூர்த்தி
10. யோக தக்ஷிணாமூர்த்தி – பிறவி குருவை அடைய, யோக பலம் பெறுக.
11.சின்மய தக்ஷிணாமூர்த்தி – மெய்ஞானத்தை அடைய.
12. உபதேச தக்ஷிணாமூர்த்தி – குரு உபதேசம் பெற.
13.ஆன்மவியாக்ஞான தக்ஷிணாமூர்த்தி – ஆன்ம தெளிவு உண்டாக.
14. வரத தக்ஷிணாமூர்த்தி
15. சக்தி தக்ஷிணாமூர்த்தி – நெற்றியில் சந்திரன், ஞான முத்திரை, சக்தியுடன் இருப்பர்.

சொல் பிறந்தால் சொரூபம் பிறக்கும், எந்தச் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்கின்றோமோ, அந்தச் சொல்லே தன்னை நினைப்பவனுக்குச் சகலமுமாய் முக்தியை அருள்கின்றது. இவ்வாறு அநுஷ்டிக்கப்படுவது மந்திரயோகம் எனப்படும்.

எனவே நாமும் குரு தக்ஷிணாமூர்த்தியின் நாமத்தை அனுதினமும் அனுஷ்டித்து ஜீவனை அந்த நாதப்பிரம்மத்தோடு ஒன்றாக்குவோமாக.

” குரவே ஸர்வ லோகானாம் பிஷயே பவ ரோகினாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே நம: ”

12 மாத தெய்வங்களின் மந்திரங்கள்

சித்திரை- மது:

சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே

வைகாசி- மாதவர்:

கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே

ஆனி- சுக்ரர்:

த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே

ஆடி- சுசி:

த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்

ஆவணி – நபோ:

சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே

புரட்டாசி- நபஸ்யர்:

பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!

ஐப்பசி- கிஷர்:

ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே

கார்த்திகை – ஊர்ஜர்:

த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே

மார்கழி – ஸஹர்:

வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம்
நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்

தை- ஸஹஸ்யர்:

ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்

மாசி – தபோ:

சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ

பங்குனி – தபஸ்யர்:

தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.

இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்ட சாலி’ என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த கிப்பிரயோக ராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »