ஏழரை சனியை விரட்டும் பரிகார வழிபாடு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார். சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார் ஆஞ்சநேயர்.

தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார். வெளியில் காத்துக் கொண்டிருந்த சனி பகவான் ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் அவரது வாலில் ஏறி அமர்ந்து இறுக்கிப் பிடித்து கொண்டார். சனி பகவானை எப்படி விரட்டுவது என சிறிது நேரம் யோசித்தார் ஆஞ்சநேயர்.

ராமபிரானைத் துதிக்கும் போது துள்ளிக் குதித்துக் கொண்டே வழிபட வேண்டும் என முடிவு எடுத்தார். அதன் படியே ஆஞ்சநேயர் குதிக்கத் தொடங்கினார். இதனால் வாலின் நுனியில் இருந்த சனி பகவானுக்கு உடல் வலி எடுத்தது.

ஆஞ்சநேயர் குதிப்பதை நிறுத்தி விட மாட்டாரா. என யோசித்த சனி பகவான் உடல் வலி அதிகமாகவே ஆஞ்சநேயரிடம் எப்போது குதிப்பதை நிறுத்துவாய்? என்று கேட்டார்.

அதற்கு ஆஞ்சநேயர், ஏழரை வருஷத்திற்கு துள்ளிக் குதித்துக் கொண்டே தான் இருப்பேன் என்றார். சனி பகவான் பயந்து போனார். இனிமேலும் ஆஞ்சநேயரைப் பிடித்துக் கொண்டிருப்பதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை என யோசித்த சனி பகவான் ஆஞ்சநேயரை விட்டு வெளியேறினார்.

ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகோள் விடுத்தார். சனீஸ்வரர், என்னை விட்டு விலகியது போல் ஏழரை ஆண்டுசனி பிடிக்கும் போது உன்னிடமிருந்து விலக வேண்டும் என நினைத்து என்னை வழிபடும் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவையும் சங்கடத்தையும் நீ கொடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

சனி பகவான் சம்மதித்தார் எனவே ஏழரை சனி, அஷ்டம சனியின் போது நமது துயரங்கள் விலக ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானிடமிருந்து விடை பெறுவதற்கு ஆஞ்சநேயர் துணைபுரிவார்…🌺

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »