ஜென்ம ராசிக்கு எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஜென்ம ராசிக்கு எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?

ஜென்ம ராசிக்கு எந்த யந்திரம் வழிபட வேண்டும்?

ஜென்ம ராசிக்கு எந்த மூலிகையை வசியபடுத்த் வேண்டும்?

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. இறைவனை இதுவரை உணராதவர்களும், உணர்ந்தவர்கள் மேலும் உணரவும் வழி செய்யும் ஒரு அற்புத மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஜென்ம ராசிக்கு உரிய மந்திரங்கள் யந்திரங்கள் மூலிகைகள்..

ஒவ்வொரு மனிதனும் நல்லநேரம் வரும்பொழுது நன்மையும், கெட்டநேரம் செயல்படும் பொழுது கெட்டவையே நடக்கும். எனினும் இராசி மூலிகையும், சக்கரமும் . மந்திரமும் பயன்படுத்தினால் கெட்டநேரத்தையும் நன்மையாக வசியப்படுத்த முடியும். அனுபவத்தில் இம்முறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் மந்திரம் உண்டு யந்திரத்தை 9 க்கு 9 இன்ச் அளவு செம்பு தகட்டில் எழுதி அதற்கான மந்திரத்தை 1008 முறை உரு ஏற்றி பிறகு நினைத்த காரியம் நடக்க வேண்டி பிறகு பயன்படுத்துங்கள். மிக அற்புத பலனை கொடுக்கும் மிக எளிய முறை இதுவாகும். யந்திரத்துடன் மூலிகையும் சிறிது பயன்படுத்தவும். அதை பிரேம் உள்ளே வைத்து யந்திரத்தை மேலே வைத்து சட்டம் அடித்து பொட்டு வைத்து வணங்கச் சொல்லவும். பிரேம் செய்யும்பொழுது பின்பக்கம் பழைய ஒரு ரூபாய் அளவிற்கு ஒரு ஓட்டை போட்டு அட்டையோ தகடோ பொருத்தச் சொல்லவும்.

மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !

ஓம் ஸம் சரஹனபவாய ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ

எந்திரம் : பால ஷண்முக ஷடாஷர யந்திரம்

மூலிகை : வைகுண்ட மூலிகை.

ரிஷப ராசி: ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை

ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

எந்திரம் : மஹாலட்சுமி யந்திரம்.

மூலிகை : அம்மான் மூலிகை.

மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ

எந்திரம் : ஸ்ரீ தன ஆகர்ஷனயந்திரம்

மூலிகை : அற்ற இலை ஒட்டி.

கடக ராசி: கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஐம் க்லீம் ஸோமாய நமஹ

எந்திரம் : ஸ்ரீ துர்கா யந்திரம்

மூலிகை : நத்தைசூரி மூலிகை.

சிம்ம ராசி: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நமஹ

எந்திரம் : ஸ்ரீ சிதம்பர சக்கரம்

மூலிகை : ஸ்ரீ விஷ்ணு மூலி.

கன்னி ராசி: கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நமஹ

எந்திரம் : ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்

மூலிகை : துளசி.

துலா ராசி: துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நமஹ

எந்திரம் : ஸ்ரீ சூலினியந்திரம்

மூலிகை : செந்நாயுருவி.

விருச்சிக ராசி: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ

எந்திரம் : பாலசண்முக ஷாடத்ச்சர யந்திரம்

மூலிகை : மஞ்சை கிளுகிளிப்பை.

தனுசு ராசி: தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நமஹ

எந்திரம் : தன சக்ர யந்திரம்

மூலிகை : சிவனார் மூலி.

மகர ராசி: மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ

எந்திரம் : ஸ்ரீ பைரவ யந்திரம்

மூலிகை : யானை வணங்கி.

கும்ப ராசி : கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நமஹ

எந்திரம் : ஸ்ரீ கணபதி யந்திரம்

மூலிகை : தகரை மூலிகை.

மீனம் ராசி: மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நமஹ

எந்திரம் : ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம

மூலிகை : குப்பைமேனி

தூய்மை நம் உள்ளத்தில் பரவுமானால் நம் செயல் பளிங்கு போல் காட்சி அளிக்கும். வெற்றித் திருமகளைத் தினமும் வணங்குங்கள். அவர்களுடைய அருளுக்கு ஆளாகிவிடுங்கள். அவர்களை பார்ப்பதற்கு நாட்களைக் கடத்தாதீர்கள்.

வெற்றியை எப்ப‍டி நாம் நேசிக்கிறோமோ அதேபோல் தோல்வியையும் நேசிக்க‍க் கற்றுக் கொள்ள‍ வேண்டும்.

வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக்கொண்டி ருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலை தொட ங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில், காரியத்தில் வெற்றி பெற ஒரே தாரக மந்திரம் தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சியும் விடாமுயற்ச்சியும் தான்.

சாதனைக்கு எல்லைகிடையாது.சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. ‘கிடைத்தது போதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. I எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »