யார் எல்லாம் குரு பகவானுக்கு விரதம் இருக்கலாம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆங்கில மாதத்தில் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், புனர்பூசம். பூரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிறந்தவார்கள் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆகிறார்கள். இவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவான் விரதம் இருப்பது நல்லது.

ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, நெற்றியில் சந்தனைத்தை பூசிக்கொள்ள வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் தட்சிணாமூர்த்தியின் படத்தை மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு திசையை பார்த்தவாறு வைத்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, ஆறு அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி, இனிப்புகள், கொண்டைக்கடலைகள், சர்க்கரை பொங்கல், கற்கண்டுகள் ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து, தூபங்கள் கொளுத்தி, தட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டி, குரு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

இவ்வியாழக்கிழமை விரத காலத்தில் ஒரு வேளை மட்டும் உணவு உண்பது சிறந்தது. வியாழக்கிழமைகளில் இந்த “குரு பகவான் விரதம்” இருப்பதன் மூலம் தங்களின் வாழ்வில் குரு பகவானின் அருளால் அனைத்து நன்மைகளும் நிச்சயம் பெற முடியும். குரு பகவான் விரதத்தை மற்ற ஆங்கில தேதி, நட்சத்திரம், கிழமை, ராசி போன்றவற்றில் பிறந்தவர்களும் மேற்கொள்ளலாம்.

ஜாதகத்தில் குரு பகவானின் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் அருளால் சிறந்த பலன்களை பெறுவதற்கு திருவாரூர் மாவட்டத்தில் குரு பகவானின் தலமான ஆலங்குடி குரு பகவான் கோவிலுக்கு குரு பெயர்ச்சி தினத்தில் குரு பகவானுக்கு செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்டு குரு பகவானை வழிபடுவது நல்லது. குரு பகவானின் அம்சம் கொண்ட திருச்செந்தூர் முருகப்பெருமானையும் வழிபடுவது வியாழ பகவானின் அருளை பெற்று தரும். குரு பகவானின் வாகனம் யானை ஆகும். உங்கள் அருகாமையிலுள்ள கோவிலில் யானைகள் இருக்கும் பட்சத்தில், வியாழக்கிழமைகள் தோறும் யானைகளுக்கு பழங்களை உணவாக கொடுப்பது குரு பகவானின் தோஷத்தை போக்கி, குரு பகவான் பாதகமான ராசிகளில் பெயர்ச்சியாகியிருப்பதால் கெடுதலான பழங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »