அன்னபூரணி அம்பாளுடன் விநாயகர்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆத்மநாத சுவாமி கோவிலில் கருவறையை சுற்றிலும் இரண்டாம் பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு விநாயர்கள் வீற்றிருக்கிறார்கள். இவர்களில் ஒரு விநாயகர் அன்னபூரணி அம்பாளுடன் வடக்கு நோக்கியபிடி இருக்கிறார். இவரிடம் மனமுருகி வேண்டிக்கொண்டால் குடும்பத்தின் கஷ்டங்கள் பறந்தோடி எப்போதும் மகிழ்ச்சியானது நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. மற்றொரு இடத்தில் தெற்கு நோக்கியபடி இருக்கும் விநாயகர் நர்த்தன (ஆடல்) கோலத்தில் இருக்கிறார். இவருக்கு கீழே இரண்டுபேர் ஆடு வது போன்ற சிற்பமும் அமைந்துள்ளது.

மேலும் இந்த கோவிலில் முக்தியை அடைவதற்கான மூன்று முக்கிய நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ‘சத்’ அம்சமாக கோவில் மகா மண்டபமும், ‘சித்’ அம்சமாக அர்த்த மண்டபமும், ‘ஆனந்த மயமாக’ கருவறையும் இருப்பது சிறப்பு.

சிவன் கோவில்கள் பொதுவாக கிழக்கு நோக்கியபடிதான் இருக்கும். ஆனால் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில் தெற்கு நோக்கியவாறு உள்ளது. சிவன் குருவாக இருந்து, தெற்கு நோக்கி அமர்ந்து உபதேசிக்கும் நிலையை தெட்சிணாமூர்த்தி என்பார்கள். இங்கு மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த ஸ்தலம் என்பதால் தெற்கு நோக்கி கோவில் அமைந்தது என்கிறார்கள். ஆவுடையார்கோவிலும், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோவிலும் தெற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »