






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
ஆவுடையார் கோவில் பகுதி மக்களுடைய நிலத்தை குறுநில மன்னன் ஒருவன் பறித்துக் கொண்டான். மக்கள் பேரரசனிடம் அந்த நிலத்தை வாங்கி தர வேண்டி முறையிட்டனர். ஆனால் குறுநில மன்னனோ அந்த நிலம் தன்னுடையது என்று மக்களிடம் வாதிட்டார். இந்த நிலமானது மக்களுடையது என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா? என்று கேட்டார் மன்னர். மன்னனை எதிர்த்து நிற்க முடியாத மக்கள் அந்த சிவபெருமானை நாடினர். அந்த நிலம் மக்களுடையது தான் என்ற உண்மை அந்த சிவபெருமானைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று, கோவிலில் வந்து முறையிட்டனர்.
உடனே அந்த சிவபெருமான் மாறு வேடத்தில் பேரரசனிடம் சென்றார். பேரரசனின் சபையில் குறுநில மன்னருக்கும், மாறுவேடத்தில் வந்த சிவபெருமானுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. மாறுவேடத்தில் வந்த சிவபெருமான் குறுநில மன்னனை அழைத்து “மன்னா உன் நிலம் எந்த தன்மையை உடையது” என்று கேட்டார். அதற்கு அந்த குறுநில மன்னனோ “அது வறண்ட பூமி என்று கூறினார்.”
மாறுவேடத்தில் வந்திருந்த சிவபெருமான் அதனை மறுத்தார். பேரரசரே அது செழிப்பான நிலம் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு. நிலத்தை தோண்டும் போது தண்ணீர் வரும் என்றார். அதன்படியே நிலத்தை தோண்ட நீர்வரத்து வெளிப்பட்டது. குறுநில மன்னன் தலைகுனிந்து மக்களிடமே நிலத்தை ஒப்படைத்து விட்டார். சிவன் தண்ணீர் காட்டிய இந்த இடம் இக்கோவிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கின்றது. அப்பகுதியை ‘கீழேநீர்காட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்துள்ளனர்.