குழந்தை பாக்கியம் அருளும் யோகாம்பாள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆத்மநாத சுவாமி கோவிலை திருவாவடுதுறை ஆதீனம் நிர்வகித்து வருகிறது. ஆவுடையார்கோவில் பகுதியை சுற்றியுள்ள 52 கிராம மக்கள் ஆத்மநாத சுவாமி கோவிலின் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அதில் நெல், கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

கோவிலின் சிறப்பு மற்றும் அற்புதங்கள் மற்றும் பலன்கள் குறித்து குருக்கள் கூறுகையில், குழந்தை இல்லாதவர்கள் ஆத்மநாத சுவாமி கோவிலுக்கு வந்து யோகாம்பாள் சன்னதிக்குச் சென்று குருந்த மரம் அருகே தொட்டில் கட்டி போட்டால் கட்டாயம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்புரிவார் அம்பிகை யோகாம்பாள்.

பின்னர் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தைகளை பெற்றோர் எடுத்து வந்து யோகாம் பாள் சந்நிதிக்கு முன்னால் பட்டுத்துணி விரித்து அதன் மேலே குழந்தையை படுக்க வைத்து பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்துகின்றனர். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களை ஆத்மநாதர் ஆட்கொண்டு விடுகிறார்.

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் கோவிலின் உள்ளே நுழைந்தால் மனதில் புதிய மார்க்கம் உண்டாகிறது. குழப்பங்கள் தீர்ந்து, தீராத பிரச்சினைகளும் ஆத்மநாத சுவாமி சன்னிதிக்கு வந்தால் தீர்ந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது. மனதில் ஏற்படும் குழப்பங்கள் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பக்தர்களிடம் இருந்து நீங்கி விடும்.

பெரும்பாலும் ஆத்ம நாதசுவாமியை வழிபடுவதற்காக திருமணமான தம்பதிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். சிவனின் மறு உருவமாக இருக்கக்கூடிய ஆத்மநாத சுவாமி பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் அருளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆவுடையார் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது என்றார்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »