சிவ பூஜையில் கலந்துக் கொள்ளும் அதிசய நாகம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பாம்பிற்கு பால் ஊற்றி தெய்வமாக வழிபடுவதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். நாம் வழிபடும் தெய்வங்களான முருகன், விநாயகர், அம்மன், சிவன், என்று அனைத்து தெய்வங்களின் திரு உருவ படத்திலும் ஒரு அங்கத்தை பெற்றது தான் நாகம்.

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளாகுளத்தில் தான் இந்த அதிசயம் நடக்கின்றது. இந்த ஊரில் வசிக்கும் சதாசிவம் என்பவர் ஒரு சிவன் பக்தர். இவர் சிறு வயதிலிருந்தே சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபடுவதில் அதிக ஆர்வம் காட்டினார்.

சதுரகிரி மலைக்கு சதாசிவம் சென்றபோது அவருக்கு புதியதாக ஒரு சிவ அனுபவம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டு தன் வீட்டிலேயே களிமண்ணால் ஆன சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்டு வந்தார்.

அவர் வெள்ளிக்கிழமை அன்று சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும்போது தான் அந்த அற்புதம் நடந்தது. ஒரு நாகம் அந்த பூஜையில் கலந்து கொள்ள அந்த இடத்திற்கு வந்துள்ளது. இந்த அதிசயம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் லிங்கத்திற்கு பூஜை செய்யும் போது அந்த நாகமானது லிங்கத்திற்கு மேல் சென்று சுற்றிக்கொள்ளும். லிங்கத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை எல்லாம் முடிந்து பூஜை செய்யும் வரை அமைதியாக நிற்கும் நாகம் பூஜை முடிந்தவுடன் சென்று விடுமாம்.

ஆரம்பத்தில் இதைப் பார்த்த ஊர் மக்கள் பயந்தாலும் நாகம் யாரையும் எதுவும் செய்யாத காரணத்தினால் அந்த ஊரில் உள்ளவர்கள் நாகத்தை சிவனாக நினைத்து வழிபட தொடங்கினார்கள். பூஜை நாட்களை தவிர மற்ற நாட்களில் இந்த நாகம் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.

இந்த அதிசயத்தை பார்க்க அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் பக்கத்து ஊர் மக்களும் பக்தியோடு வந்து சிவனை வழிபட்டு செல்கின்றனர். பத்து வருடங்களாக சதாசிவம் இந்த பூஜையை தொடர்ந்து செய்து வருகின்றார். பத்து வருடங்களாக அந்த நாகமும் சிவபூஜைக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றது.

கலியுகத்து கடவுள் நேரடியாக தரிசனம் தர மாட்டார் என்ற கூற்றுப்படி சதாசிவத்திற்கு அந்த எம்பெருமான் நாக ரூபத்தில் தரிசனம் அளிக்கின்றார் என்பது தான் உண்மை. நம்பிக்கையோடு செய்யும் பூஜைக்கு பலன் உண்டு என்பதற்கு சதாசிவத்தின் பக்திதான் எடுத்துக்காட்டு.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »