களத்திர தோஷ பரிகாரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருமணத் தடை, திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவி கருத்து வேறுபாடு, ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம், மன நிறைவு இல்லாத மண வாழ்க்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

பரிகாரம்

* சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள், ஸ்ரீ காளகஸ்தி சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.

* சூரியன், சனி சேர்க்கையால் திருமணத்திற்கு முன்-பின் பிரச்சினை இருந்தால் சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்தால் நலம் உண்டாகும்.

* சுக்ரன், கேது சேர்க்கை இருப்பவர்கள், சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.

* செவ்வாய், கேது சேர்க்கை இருப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை வழிபட வேண்டும்.

* சனி, ராகு-கேது சம்பந்தம் இருந்தால், ராகு கால வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »