தீயவற்றை அழிக்கும், சிவபெருமானை போற்றும் ருத்ர மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய
த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய
காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய

ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம

தீயவற்றை அழிக்க ரௌத்திரம் கொண்ட ருத்ரமூர்த்தியாகிய சிவ பெருமானை போற்றும் ருத்ர மந்திரம் இது. இந்த மந்திஇரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். திங்கட்கிழமைகள் பிரதோஷம் சிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது இம்மந்திஇரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

எல்லா உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவ பெருமானுக்கு வந்தனம் செய்கிறோம். முக்கண்களை கொண்டவரும் திரிபுரம் எனப்படும் மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரே உங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவை வழங்கும் காலமாக இருப்பவரும் உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டர் ஆகியவரும் கொடியதை அழிகின்ற ருத்ர நடமாடி ருத்ரராகவும் சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவனை வணங்குகிறேன் என்பதே இதன் பொதுவான பொருளாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »