சூரிய பகவானை பற்றி


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நவக்கிரகங்களில் முதன்மையானவராக கருதப்படும் சூரிய பகவான், உலக மக்களின் வழிபாட்டு கடவுளாக இருக்கிறார். உலகம் தோன்றியதில் இருந்து மனிதன் வழிபட்ட முதன்மை கடவுளாகவும் சூரியனே கருதப்படுகிறார். சூரியனை வழிபடுவதை ‘சவுரம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இங்கு சூரிய பகவானைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.

சூரிய பகவான் 7 குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் வலம் வருபவர். காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பங்கிதி என்று அழைக்கப்படும், அந்த 7 குதிரைகளும், வாரத்தின் 7 நாட்களைக் குறிப்பவையாகும்.

சூரிய பகவானைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல் ‘ஆதித்ய ஹிருதயம்’ என்று அழைக்கப்படுகிறது. துன்பம் வரும் நேரங்களில் இந்த நூலை பாராயணம் செய்தால் துன்பங்கள் விலகிவிடும். தேர்வுக்கு செல்பவர்கள், ‘ஆதித்ய ஹிருதயம்’ சொல்லி சென்றால் வெற்றி உறுதி என்பது ஐதீகமாகும்.

ராமாயண இதிகாசத்தின் நாயகனாக வலம் வருபவர் ராமபிரான். இவர் வனத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் தூக்கிச் சென்று, அசோகவனத்தில் சிறை வைத்தான். ராவணனுடன் போருக்கு செல்லும் முன்பாக, ராமபிரான் ‘ஆதித்ய ஹிருதய’த்தை பாராயணம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனை ராமனுக்கு உபதேசித்தவர், அகத்தியர் ஆவாா்.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயணரைப் போலவே, சூரிய பகவானுக்கும் சங்கு மற்றும் சக்கரம் ஆயுதமாக உள்ளது. அதனால் சூரியனை அனைவரும் ‘சூரிய நாராயணர்’ என்றும் அழைப்பார்கள்.

தை மாதம் சூரியனின் தேர், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணப்படும். அன்றைய நாளுக்கு ‘ரதசப்தமி’ என்று பெயர். அன்றைய தினம் சூரியனை வழிபட்டால், சகல சவுபாக்கியங்கள் கிடைக்கும்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »