64 கோடி தேவதைகளும் வசிக்கும் ஸ்ரீசக்கரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

‘பிந்து முக்கோணம், எட்டுக்கோணம், இரண்டு பத்துக்கோணங்கள், பதினாறுகோணம், எட்டு தளம், பதினாறுதளம், மூன்று வட்டம், மூன்று கோட்டுபூபுரம் என்று அனைத்தும் அடங்கிய அமைப்பே ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ சக்கரம் எனப்படும்.

இச்சக்கரத்தில் சிவசக்கரங்கள் நான்கு. சக்தி சக்ரங்கள் ஐந்து என ஒன்பது சக்ரங்கள் அமைந்துள்ளன. இது சிவசக்தியாகிய இருவருடைய வடிவத்தையும் குறிக்கும்.

இவற்றுள் முக்கோணம், எட்டுக்கோணம், இரண்டு பத்துக்கோணங்கள், பதினான்கு கோணங்கள் என்ற ஐந்தும் சக்திசக்கரங்கள் எனப்படும். பிந்து, எட்டிதழ் கமலம், பதினாறிதழ் கமலம், நான்கு கோட்டம் என்ற இந்த நான்கும் சிவசக்கரங்கள் எனப்படும். சக்தி கோணங்கள் ஐந்தும் கீழ்நோக்கியும் சிவசக்ரங்கள் நான்கும் மேல் நோக்கியும் உள்ளன.

ஸ்ரீசக்கரத்தை வெள்ளைப்பூக்களால் அர்ச்சனை செய்பவரது நாவில் சரஸ்வதி நடனம் புரிவாள். சிவப்பு, வெள்ளை கலந்த மலர்களால் அர்ச்சனை செய்தால் ராஜவசியம் உண்டாகும். மஞ்சள் நிறப்பூக்களால் அர்ச்சனை செய்தால் திருமகளின் திருவருள் உண்டாகும்.

இத்தகைய ஸ்ரீசக்கர வழிபாட்டினால் மகாவிஷ்ணு மோகினி வடிவம் கொண்டார் என்றும் பிரம்மன், படைக்கும் தொழிலுக்கு உரியவன் ஆனான் என்றும் சிவபெருமான் ‘சர்வ வித்யோஸ்வரர்’ என்ற பெருமையைப் பெற்றார் என்றும் மன்மதன் மயக்கும் சக்தியைப் பெற்றான் என்றும் ஹயக்ரீவர் கூறி உள்ளார்.

ஸ்ரீசக்கரம் அம்பாளின் சொரூபம் . ஸ்ரீசக்கரத்தில் ஆவரண தேவதைகளுடன் பராசக்தி பிரகாசிக்கிறாள். ஸ்ரீ சக்கரத்தின் 64 கோடி தேவதைகளும் வசிக்கிறார்கள். 9 சக்கரங்கள் உள்ளதால் இதற்கு ‘நவசக்கரம்’ என்ற பெயர் உண்டு. மேலும் ஐம்பதோரு கணேசர்கள், சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள், அசுவினி முதலான இருபத்தேழு நட்சத்திரங்கள், ஏழு யோகினிகள், பன்னிரண்டு ராசிகள், ஐம்பத்தொரு பீடதேவதைகள் என 157 தேவதைகள் ரூபமாக அம்பாள், ஸ்ரீசக்கரத்தில் பூஜிக்கப்படுகிறாள்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »