சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி விரதம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள் மாதந்தோறும் வரும் அஷ்டமி தினங்கள் ஆகும். அந்த வகையில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை விரதம் இருந்து வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வருகிற வைகாசி தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமான தினமாக இருக்கிறது.

இன்று மாலை வேளையில் காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மலர் மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி காலபைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. ‘

மேற்கண்ட முறையில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவரை வழிபடுபவர்களுக்கு சீக்கிரத்தில் பணவரவு பன்மடங்கு அதிகரிக்கும். பிறருக்கு கொடுத்த கடன் தொகைகள் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முன்னோர்களின் சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக தீரும். நீண்ட நாட்களாக உடலையும் மனதையும் வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும். குழந்தைகளின் கல்வியில் ஏற்படும் மந்த நிலை நீங்கி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »