மகாபாரத அஸ்திரங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஆயுதங்களும், அஸ்திரங்களும் பெற்றிருந்தனர். அந்த ஆயுதங்களும், அஸ்திரங்களும் வலிமையுடையதாகவும், தனிப் பெருமை கொண்டதாகவும் இருந்தன. அதோடு தனித் தனி பெயர்களைக் கொண்டும் அழைக்கப்பட்டு வந்தன. இங்கே சிலரது ஆயுதங்கள், அஸ்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

* அர்ச்சுனனின் வில்லின் பெயர் ‘காண்டீபம்’

* கிருஷ்ணர் வைத்திருக்கும் வில்லின் பெயர் ‘சாரங்கம்’

* எய்தும் போது கல் மழையை பொழியும் அஸ்திரம் ‘பர்வதாஸ்திரம்’

* சகாதேவன் வைத்திருந்த புகழ்பெற்ற வாள் ‘கவுசிகீ’

* கிருஷ்ணர் வைத்திருக்கும் சக்கரத்தின் பெயர் ‘சுதர்சனம்’

* அர்ச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த ஆயுதம் ‘வஜ்ர தத்தம்’

* சிவபெருமான் அர்ச்சுனனுக்கு கொடுத்த அஸ்திரம் ‘பாசுபதம்’

* கர்ணனை வதம் செய்ய அர்ச்சுனன் பயன்படுத்திய அம்பு ‘அஞ்சலிகம்’

* கடோத்கஜனை வதம் செய்ய கர்ணன் பிரயோகித்த சக்தி ‘வைஜயந்தி’

* குபேரன் அர்ச்சுனனுக்குக் கொடுத்த சிறந்த ஆயுதம் ‘அந்தர்தானம்’

* காண்டீபம் வில்லை அர்ச்சுனனுக்கு அளித்தவர் ‘வருணன்’

* திருமாலின் அவ தாரங்களில் ஒன்றான பரசுராமருக்கு போர் கருவியான கோடரியை அளித்தவர், சிவபெருமான்.

* அஷ்ட வசுக்களிடம் இருந்து பீஷ்மருக்குக் கிடைத்த சிறந்த ஆயுதம் ‘ப்ரஸ்வப்னாஸ்திரம்’

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »