






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து நவம்பர் மாத தொடக்கம் வரை நடை திறந்திருக்கும். ஆனால் நோய்த்தொற்று காரணமாக மே 15-ந் தேதி (அதாவது நேற்று) நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் தலைமை பூசாரி ராவல் ஈஸ்வரி பிரசாத் நம்பூதிரி தலைமையில் 10 பூசாரிகள் நடை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கோவில் திறப்பையொட்டி ஆயிரம் கிலோ பூக்களால் கோவில் நன்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் காலை 9 மணிக்கு பிரதமர் மோடி சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.