உப்பு மண் பிரசாதம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நாமக்கல்லில் உள்ள செல்லாண்டி அம்மன் ஆலயத்தில் உப்பு மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த உப்பு மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டால், உடல்நலம் சீராகும் என்பது ஐதீகம்.

நாமக்கல்லில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மோகனூா். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஒருவந்தூர் செல்லாண்டி அம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் பேச்சியம்மன், சடையாச்சி அம்மன் என பல தெய்வங்கள் அருளாட்சி செய்கின்றன. மூலவர் செல்லாண்டி அம்மன் கருவறைக்கு பக்கத்தில் பள்ளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

இங்கு உப்பிலியன் திட்டு என்ற இடத்தில் உப்பு மண் உள்ளது. பூஜை முடிந்ததும் இந்த உப்பு மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த உப்பு மண்ணை நெற்றியில் பூசிக்கொண்டால், உடல்நலம் சீராகும் என்பது ஐதீகம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »