மீனாட்சி வழிபாடும், 8 விதமான சக்திகளும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மதுரையில் மீனாட்சி அம்மன், தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு ஆகும். அந்த 8 வித ஆராதனைகளைப் பற்றிப் பார்ப்போம்..

திருவனந்தல் பள்ளியறையில் – மஹா ஷோடசி

ப்ராத சந்தியில் – பாலா

6 முதல் 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி

12 முதல் 15 நாழிகை வரையில் – கவுரி

மத்யானத்தில் – சியாமளா

சாயரட்சையில் – மாதங்கி

அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

மதுரை மீனாட்சி அம்மனுக்கு 5 கால பூஜைகள் நடக்கும் போது, அம்மனுக்கு செய்யும் அலங்காரங்களும் மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்ப இருக்கிறது. மாலை நேரத்தில் தங்க கவசம், வைரக்கிரீடம் போன்ற அலங்காரங்கள், காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்ற அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

எல்லா கோவில்களும் போல இங்கும் பள்ளியறை, அம்மன் சன்னிதியில் இருக்கிறது. இரவு சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் சுவாமி சன்னிதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரதி (மூக்குத்தி தீபாராதனை) நடக்கிறது. அதன் பின்னர் அம்பிகையின் சன்னிதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

மதுரையில் பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சி. பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

மேலும் கணவன் – மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பயனைக் கொடுக்கும்

பிள்ளை இல்லாதவர்கள்: காலையில் மீனாட்சியின் சிறுபிள்ளை அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் கட்டாயம் பலன் தருவாள் அன்னை என்கின்றனர்.

வியாபார நஷ்டம்: தொழில் மற்றும் வேலையில் பிரச்சினை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரம் கண்டு முன்னேற்றம் பெறலாம்.

இதையெல்லாம் விட எல்லா அலங்காரத்திலும் அம்மனை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

முடிந்தவர்கள் ஒருமுறையாவது மதுரை சென்று மீனாட்சி அம்மனை நேரில் தரிசனம் செய்யுங்கள்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »