கும்பகோணத்தில் அமைந்து சிறப்பு வாய்ந்த கோவில்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உப்பிலியப்பன்

திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இத்தல இறைவனுக்கு, ‘உப்பிலியப்பன், விண்ணகரப்பன்’ என்று பெயர். இத்தல இறைவனை வேண்டிக் கொண்டால், தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது, 13-வது திவ்யதேசம்.

நாகநாதர்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இங்கு இறைவன் ‘நாகநாதர், நாகேஸ்வரர்’ என்றும், இறைவி, ‘பெரியநாயகி, பிருஹந்நாயகி’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இந்தச் சன்னிதியில் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு கால வேளையில் பூஜைகள் செய்தால் சகல நோய்களும் தீரும். சித்திரை மாதத்தில் வரும் 11, 12, 13 தேதிகளில் சூரியனின் ஒளி, இத்தல லிங்கத்தின் மீது படும் விதத்தில் சோழர்கள் அமைத்துள்ளனர்.

கும்பேஸ்வரர்

கும்பகோணம் நகரின் மையத்தில் உள்ளது கும்பேஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவன், ‘அமுதேஸ்வரர், குழகர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவன், சுயம்புமூர்த்தியாவார். கல்வியில் சிறந்து விளங்குபவர்கள், தொழில் தொடங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள், இத்தல இறைவனை வழிபடலாம்.

சாரங்கபாணி

கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது சாரங்கபாணி ஆலயம். இத்தல இறைவன், ‘சாரங்கபாணி, ஆராவமுதன்’ என்று அழைக்கப்படுகிறார். இவ்வாலய கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், 12-வது திய்வ தேசம் இது.

பட்டீஸ்வரர்

கும்பகோணம் நகரின் அருகில் உள்ளது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம். இத்தல இறைவன் பட்டீஸ்வரர் என்று பெயர்பெற்று விளங்குகிறார். அம்பாளின் திருநாமம், ‘பல்வளைநாயகி, ஞானம்பிகை’ என்பதாகும். ‘பட்டி’ என்ற பசு, மணலால் சுயம்பு லிங்கம் அமைத்து வழிபட்டதால், இத்தலத்துக்கு ‘பட்டீச்சரம்’ என்று பெயர் வந்தது. இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு-கேது தோஷங்கள் விலகும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »