மேன்மை தரும் ஸ்ரீ அக்னி சூரிய மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சூரியன் இன்றி உலக இயக்கம் இல்லை.
நவக்கிரஹங்களில் ஒருவராகவும்,
நவக்கிரகங்களுக்குத் தலைவராகவும் போற்றப்படுகிறார்.

பஞ்ச பூதங்களில் அக்னி அம்சமாகக் கருதப்படுபவர்.
சூரியன் வெப்பத்தை அளிக்கிறது.
ஆனால், குளிர்ச்சியைத் தரும் சந்திரனும் கூட
சூரியனிடம் இருந்தே அதற்கான
சக்தியைப் பெற்றுச் செயல்படுகிறது.

மந்திரத்தின் பலன்கள்

அக்னி சூரிய மந்திர பலத்தால் கர்ம வினையின் கெடுபலன்கள் வெகுவாகக் குறையும். பித்ரு தோஷம் தீரும்.  வேலையில், அதிகாரிகளுடன்  உள்ள பிரச்சனைகள் தீரும்.
அதோடு வேலை, தொழில், அரசாங்க காரியம் இவற்றில் உயர்வும் கிட்டும். இதை குடும்பத்தில் உள்ள யாவரும் தனியாகவோ அல்லது சேர்ந்தோ செய்யலாம்.

சொல்லும் முறைகள்

அமாவாசை அன்று துவங்கிக் குறைந்தது 10 ஞாயிற்றுக்கிழமைகள் 108 முறை சொல்லி வரலாம். (அ)  ஒரே நாளில் (அமாவாசை அன்று)  1008 முறை சொல்லி வரலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசையில்  செய்ய மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

மந்திரம்

ஓம் பூர் புவ ஸூவஹா |அக்னயே ஜாதவேத இஹாவஹா |
சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா ||

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »