சனி தோஷம் போக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சனீஸ்வரன் வருகிறான். தொல்லை கொடுக்கப் போகிறான் என சிவன் உள்பட அனைவரும் பயப்படக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கு ஏற்றார் போல் பாதிப்பு கொடுக்க கூடியவர். எனவே இவரே நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். அதிலும் தலைமை நீதிபதி என்றால் கன கச்சிதமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர்தான்.

எமதர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் சனி நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால் ஏழரை அஷ்டமத்து சனி, கண்ட சனி, மங்கு சனி, அந்த கால கட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து நவக்கிரக நாயகி முத்தாரம்மனை மனம் உருகி சனிக்கிழமை வழிபட்டால் பாதிப்பு குறையும். சனி அவரை விட்டு விலகும். விலகும் போது பல நன்மைகளை செய்து விட்டு செல்வார்.

சனி தோஷத்தை விரட்ட சனிக்கிழமை அதிகாலை குலசேகரபட்டினம் கடலில் குளித்து சூரியனை பார்த்து “சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்” என்று பாடுங்கள்.

பின்பு வரும் வழியில் இருக்கும் சிதம்பரேஸ்வரர், சிவகாமி அம்மனை தரிசித்து விட்டு பின்பு முத்தாரம்மனுக்கு நல்லெண்ணை வாங்கி கொடுங்கள். ரூபாய் நாணயம் 8 காணிக்கை உண்டியலில் செலுத்துங்கள். உங்கள் சனி தோஷம் விலகி யோகம் ஏற்படும்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »