






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
மகாலட்சுமியிடம் செல்வத்தை வேண்டுமானால் யாசிக்கலாம். செல்வம் இருந்தால் மனநிம்மதி கிடைத்து விடுமா! அந்த நிம்மதியைத் தருபவள் ஆண்டாள். அவள் பூமாதேவியின் அவதாரம் என்பதால் பொறுமை மிக்கவள்.
நாம் செய்கிற தவறுகளை பகவானிடம் மறைத்து விடுவாள். அதேநேரம், ஏதேனும் ஒரு நல்லது செய்தால் போதும். அதை பெரிதுபடுத்திக் காட்டி, வேண்டிய வரத்தை வாங்கித் தருவாள். அவளை பரமகாருண்ய தேவதை என்பர்.
மனிதனாகப் பூமியில் பிறந்தவன், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து, தான் செய்த பாவங்களையெல்லாம், ஒரு முறையாவது ஆண்டாளிடம் சொல்லி விட வேண்டும். அவள் அவற்றையெல்லாம் மறைத்து, மனம் திருந்திவிட்டதை மட்டும் பகவானிடம் எடுத்துச்சொல்லி மன்னிப்பைப் பெற்றுத் தருவாள். நாம் நிர்மலமான (குற்றமற்ற) மனதுடன் இல்லம் திரும்பலாம்.