வாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

எப்படிப்பட்ட வாராக் கடனாக இருந்தாலும், அந்த கடன் தொகையை வசூலித்து தரக்கூடிய சக்தி பைரவருக்கு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அஷ்டமி தினத்தில் தொடர்ந்து பைரவரை வழிபட்டு வந்தோமேயானால், கடன் பிரச்சனையில் இருந்தும், எதிரி தொல்லையிலிருந்து விடுபட முடியும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.

பைரவரின் இந்த மந்திரத்தை, இந்த முறையில் எழுதும் பட்சத்தில் 48 நாட்களுக்குள், கொடுத்த கடன் தானாகவே வசூலாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மந்திரம் என்ன, அதை முறைப்படி எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முடிந்தவர்கள், காலை சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாகவே இந்த மந்திரத்தை எழுதலாம். முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் இந்த மந்திரத்தை எழுதலாம். முதலில் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, ஒரு வெள்ளைத்தாளில் நான்கு பக்கமும் மஞ்சள் வைத்து, நடுவே ஒரு மஞ்சள் வைத்து, அந்த காகிதத்தில் முதலில் ‘ஓம் பழனி முருகா நமஹ’ உங்களது குலதெய்வம் என்னவோ, அந்தப் பெயரை பழனி முருகன் பெயருக்கு பதிலாக போட்டுக்கொள்ள வேண்டும்.

அதன்பின்பு ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயக நமஹ’ மேற்கொள்ளக் கூடிய காரியம் தடையில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக கணபதியை வேண்டிக்கொள்ள போகின்றோம். இந்த இரண்டு மந்திரங்களையும் ஒருமுறை எழுதினால் போதும். இறுதியாக ‘ஓம் ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 11 எழுத வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 108 நாட்கள் இந்த மந்திரத்தை எழுதி வந்தீர்கள் என்றால், உங்களுக்கான பலன் கைமேல் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 108 நாட்களா! என்று சிரமப்பட வேண்டாம்.

பல வருடங்களாக வரவே வராது என்று, நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த கடன் தொகையாக இருந்தாலும், வட்டியோடு சேர்த்து வசூலாகும் என்பதில் சந்தேகமே இல்லை. எழுதத் தெரியாதவர்கள், இந்த மந்திரத்தை வாயால் உச்சரிக்க சொல்லி, சொல்லலாம். மந்திரத்தை உச்சரித்து இந்த வழிபாட்டை செய்வதைவிட, எழுதுவதன் மூலம் விரைவாகவே பலன் கிடைக்கும். உங்களது மகன், மகள் இப்படி உங்கள் வீட்டில் இருக்கும் உறவுகளும், உங்களுக்காக வேண்டிக்கொண்டு, இந்த மந்திரத்தை எழுதி, பரிகாரத்தை உங்களுக்காக செய்யலாம். பல பேர் இந்த முறையை பின்பற்றி பயன் அடைந்துள்ளார்கள், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »