திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும், மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது.

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் திருமால் சக்கரம் வேண்டிப் பூசிக்கும்போது ஒரு மலர் குறையத் தன் கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்தார் என்பது தொன்நம்பிக்கை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம் என்ற தொன்நம்பிக்கையும் உள்ளது.

பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக் கருதியது போன்றது இது.

விழி என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன் பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று.

தொழில்நுட்பம்

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

சங்ககாலம்

சங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும் வள்ளல் இதனை ஆண்டுவந்தான்.

மிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப் போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

சங்ககாலத்தில் இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட குறுநிலத் தலைவன் எவ்வி. இவன் சிறந்த வள்ளல்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி கிழார்).

திருவீழிமிழலை என்ற ஊரில் ஸ்ரீநேத்ரார்ப்பனேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு ‘கல்யாண சுந்தரர்’ என்று அழைக்கப்படும் ‘மாப்பிள்ளை சுவாமி’ உற்சவ மூர்த்தியாக விளங்குகிறார். அவர் பாதத்தின் மேலே, திருமால் அர்ச்சித்த கண் மலர் உள்ளது.

திருமண வீடுகளில் வைத்திருப்பதுபோல் இங்கும் அரசாணிக்கால் உள்ளது. வயதாகியும் மணமாலை கூடாமல் இருப்பவர்கள், இந்த திருக்கோவிலுக்கு வந்து, மாலை சூட்டியபடியே அரசாணிக்காலை மூன்று முறை வலம் வந்து கல்யாண சுந்தரரை வழிபட்டால் கல்யாணக் கனவுகள் நனவாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »