பிரளயம் காத்த விநாயகர்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடமேற்குத் திசையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருப்புறம்பியம். இங்குள்ள ‘பிரளயம் காத்த விநாயகர்’ மிகச் சிறப்பு மிக்கவர். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் உலகத்தை புதுப்பிக்க பெருவெள்ளம் வந்து பெரும் அழிவை ஏற்படுத்தும். இதற்கு ‘பிரளயம்’ என்று பெயர். அவ்வாறே கிருதயுகத்தின் முடிவிலும் உலகை பெருவெள்ளம் சூழ்ந்தது. இத்தலத் தைக் காக்கும் பொருட்டு சிவபெருமான், விநாயகரிடம் பிரளயத்தை தடுத்து நிறுத்து மாறு கூறினார். அவரின் கட்டளையை ஏற்று விநாயகப்பெருமானும் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளப்பெருக்கை ஓம்காரம் கொண்டு தடுத்து ஒரு கிணற்றுக்குள் அடக்கினார்.

அத்தருணத்தில் வருணபகவான் கடலில் இருக்கும் நத்தை, சங்கு, கிளிஞ்சல், கடல்நுரை போன்றவற்றைக் கொண்டு விநாயகரின் திருவுருவத்தை செய்து இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார். அவரே ‘பிரளயம் காத்த விநாயகர்’ ஆவார். விநாயகர், இயற்கையை மீறிப் புறம்பாக காத்ததால் இத்தலத்திற்கு ‘திருப்புறம்பியம்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

இந்த விநாயகருக்கு தினசரி அபிஷேகம் கிடையாது. ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் தேனாபிஷேகம் இரவும் பகலும் தொடர்ந்து நடைபெறும். அச்சமயம் அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதையும் விநாயகரின் திருவுருவம் உறிஞ்சிக் கொள்வது கண்கொள்ளாக் காட்சியாகும். எப்போதும் வெளிர் சந்தன நிறத்தில் இருக்கும் விநாயகரின் திருமேனி தேன் அபிஷேகம் முடிந்தபின், செம்பவள நிறத்தில் ஜொலிப்பது அழகோ அழகு.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »