கோரிக்கைகள் நிறைவேற துளசி விரத பூஜை அனுஷ்டிக்கலாம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஸ்ரீ மகா லக்ஷ்மியின் அவதாரமாக துளசி விளங்குவதுடன், பாம்பை மெத்தையாக கொண்டு துயிலும் எம் பெருமானின் மார்பில் மாலையாக என்றென்றும் தவழ்ந்து வலம் வருகிறாள்.

எம் பெருமானுக்கு இரண்டு பொருட்களில் தீராத காதல் உண்டு. ஒன்று கள்ளம் கபடு இல்லாத வெள்ளை உள்ளம் கொண்ட பக்தர்கள் மீது ஒரு பூவை எடுத்து சமர்ப்பித்தாலும் நம்மை தேடி ஓடி வருபவர் எம் பெருமான். லக்ஷ்மி கருணையின் பிறப்பிம். துளசி, சங்கு, சாளக் கிராமம் மூன்றும் ஒன்றாக வைத்து பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும்.

முதலில் எந்த கடவுளை வணங்குவதாக இருந்தாலும், பூஜை தடங்கல் இன்றி நடக்க, முழு முதல் கடவுளான விநாயகப் பெருமானை வணங்க வேண்டும். வெற்றிலை மீது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து “ஓம் விக்னேஸ்வரா நமஹ” என்று 3முறை சொல்லி, மலர் போட்டு வணங்கவும். அருகம் புல் போட்டு விநாயகரை வணங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

துளசி மாடம் இல்லாதவர்கள் 12 அல்லது 16 செங்கற்களால் துளசி பீடம் அமைத்து, அதன் முன்பு பெரிய அகல் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அடுத்து பீடத்தின் நடுவில் துளசி செடி வைத்து, சுற்றிலும் 12 என்ற எண்ணிக்கையில் சந்தானம் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும்.

துளசி செடியில் துளசி தேவியையும், ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக் குச்சியையும் வைத்து அதில், மகா விஷ்ணுவையும் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது விசேஷம். நெல்லிக்குச்சி இல்லை என்றால் கிருஷ்ணன் படத்தையோ அல்லது சிலையையோ வைத்து பூஜை செய்யலாம்.

துளசி பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, குடும்ப அமைதி, லக்ஷ்மி கடாட்ஷம், வம்சம் தலைக்கும். உடல் வலிமை, மனோ தைரியம் உண்டாகும். நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும். துளசி இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகளோ, துர்மரணங்கள் கிட்ட நெருங்காது.

துளசிக்கு வைக்கும் நெய்வேதியத்தை தாம்பூலத்துடம் கொடுக்கும் போது துளசியுடன் கொடுத்தால் பூஜையின் பலன் அதிகமாகும். பிருந்தையான துளசி மகா விஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி.

கார்த்திகை மாதம் துளசி பூஜையுடன் பகவானை துளசியால் அர்ச்சனை செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும். அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »