கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து வழிபட்டால், எந்த நாளும் இனிய நாளாக அமையும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சிந்தை மகிழ வழிபட்டால், எந்த நாளும் இனிய நாளாக அமையும் என்பது முன்னோர்களின் வாக்கு. அந்த அடிப் படையில் கார்த்திகைத் திருநாளில் நேர்த்தியாக முருகனை நாம் வழிபட்டால் பாராட்டும், புகழும் கிடைக்கும். அதனால்தான் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்று சொல்லிவைத்தார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபட உகந்த நாள் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினமாகும்.

‘திரு’ என்ற அடைமொழி, சிறப்புமிக்க சில ஊர்களோடு இணைந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக திருப்பத்தூர், திருமயம், திருவாடானை, திருவாரூர், திருப்பதி, திருப்புங்கூர், திருவாடுதுறை, திருப்பூர், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருநெல்வேலி, திருமழபாடி, திருத்தணி உள்ளிட்ட எண்ணற்ற தலங்கள் ‘திரு’ என்ற அடைமொழியுடன் இருப்பதைக் காணலாம்.

அதேபோல பெருமைக்குரிய நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற அடைமொழியுடன் கொண்டாடப்படும் திருநாள் ‘திருக்கார்த்திகை’ ஆகும். அந்த நாளன்று முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டால் அந்த முத்துக் குமரன் உங்களுக்கு முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.

திருக்கார்த்திகை தினம் அருள்வழங்கும் முருகப்பெருமானை வழிபட்டால் பொருள் வளம் பெருகும். ஆலயம் சார்ந்த மலைகளை வலம் வந்து வழி பட்டால், வாழ்வில் மகத்துவம் காணலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »