தங்கத்தால் செய்யப்பட்ட திருவடிகள் சக்கரபாணி கோவில் உற்சவருக்கு வழங்கப்பட்டது


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்கரபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சக்கரபாணி கோவில் உற்சவர் சிலைக்கு 500 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட திருவடி காணிக்கையாக நேற்று வழங்கப்பட்டது.

கும்பகோணம் பகவத் கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட இந்த திருவடிகளின் மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும்.

இந்த திருவடிகளை காணிக்கையாக கோவிலில் ஒப்படைப்பதற்காக நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவருக்கு திருவடிகள் அணிவிக்கப்பட்டன.சக்கரபாணி கோவிலில் உள்ள உற்சவருக்கு முதலாவதாக தங்கத்தால் செய்யப்பட்ட திருவடி செய்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் உற்சவருக்கான பல்வேறு பாகங்கள் காணிக்கையாக வழங்கப்பட உள்ளது என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »