இந்திரனால் பூஜிக்கப்பட்ட சுவேத விநாயகர்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சுவாமிமலைக்கு அருகில் உள்ள திருவலஞ்சுழியில் வலஞ்சுழி நாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் நுழைவு வாசலைக் கடந்ததும் ‘வெள்ளை’ விநாயகர் கோவில் இருக்கிறது. இவ்விநாயகருக்கு ‘சுவேத விநாயகர்’ என்று பெயர். தேவர்களின் தலைவனான இந்திரனால் பூஜிக்கப்பட்டவர் இவர். பாற்கடலைக் கடைந்த தேவர்கள், கடல் நுரை கொண்டு இந்த விநாயகரை உருவாக்கினர். ‘சுவேதம்’ என்ற சொல்லுக்கு ‘வெண்மை’ என்று பொருள். கடல்நுரையின் காரணமாக வெள்ளைநிறம் கொண்ட இந்த விநாயகர் ‘சுவேத விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.

கடல்நுரையால் உருவாக்கிய திருமேனி, ஆதலால் இவரின் விக்கிரகத்தை கையினால் தொட்டு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தூய்மையான வெண்சங்கு கொண்டே அபிஷேகம் நடைபெறுகிறது. பச்சைக்கற்பூரம் சாற்றிய அபிஷேகம் சிறப்பானது. காவிரி வலமாக சுழித்துச் செல்வதால் ‘வலஞ்சுழி’ எனப் பாடல் பெற்றது இத்தலம். இங்குள்ள இறைவன் சிவபெருமானுடன், அழகிய கோவில் தூண் மண்டபக் கருவறையில் அழகாக வீற்றிருக்கிறார் சுவேத விநாயகர். இச்சன்னிதியில் கருங்கல்லால் ஆன பலகணி எனப்படும் ஜன்னலும், கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பும் நம் சிற்பக்கலையின் தனித்துவத்துக்கு சான்றாகும். இந்த விநாயகரை வணங்குவோருக்கு செல்வவளம் பெருகி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »