துளசி வழிபாட்டு பலன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மரங்களை வழிபடுவது என்பது இந்து மதத்தில் இருக்கும் சிறப்புகளில் ஒன்று. அனைத்து ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் ஒரு மரம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட தாவர வழிபாடுகளில், துளசியே முதன்மையான இடத்தைப் பெறுவதாக சொல்லப்படுகிறது. துளசி இலையில் கணவன்-மனைவியான மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் இருக்கிறார்கள். எனவே துளசி பூஜை செய்யும் கன்னிப் பெண்களுக்கு, விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். மேலும் திருமணமான பெண்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் கிடைத்து அவர்கள் கணவருடன் நீடூழி வாழ்வார்கள். துளசி பூஜை செய்பவர்களுக்கு, அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

துளசிச் செடியின் வேரில் அனைத்து புனித தலங்களும் அடங்கி இருக்கின்றன. எனவே அதன் வேரை வழிபாடு செய்பவர்களுக்கு, நினைக்கும் புனித தலங்களுக்கு யாத்திரை சென்று வந்ததற்கான பலன் கிடைக்கும். துளசிச் செடிக்கு தினமும் நீர் ஊற்றி வளர்த்து வந்தால், தங்களின் இறுதிகாலத்தில் மோட்சம் கிடைக்கப்பெறலாம் என்பது நம்பிக்கை. ஒருவர் இறந்ததும் அவரது உடல் மீது ஒரு துளசி இலையை வைத்து எரித்தால், அவரது ஆன்மாவானது கிருஷ்ணர் வசிப்பதாக சொல்லப்படும் கோலோகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பத்ம புராணம் சொல்கிறது.

துளசிச் செடியின் வேர் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டால், அனைத்து காரியங்களும் வெற்றியாகும். துளசியை நினைத்து வழிபட்டாலே, செய்த பாவங்கள் அனைத்தும் தீயில் இட்ட பஞ்சு போல பொசுங்கிப்போகும். துளசியை பக்தியோடு பராமரிக்கிறவன், பரமாத்மாவாகிறான். துளசியை வழிபட்டால் ஆயுள் கூடும். செல்வம் சேரும். நல்ல பிள்ளைகள் வாய்ப்பார்கள். துளசிக் கட்டையை மாலையாக, பக்தியோடு கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசித் தீர்த்தம் பருகினால் பரமபதத்தை அடையலாம்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »