ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஏகாந்த திருமஞ்சனம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கொரோனா ஊரடங்கினால் தற்போது தமிழகமெங்கும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. எனினும், அந்தந்த காலத்திற்கான பூஜைகள் ஆகம முறைப்படி நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. பார்சுவ சூடாமணி சூரியகிரகணம் என்ற பெயரில் நடந்த இந்த சூரிய கிரகணம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக வேத விற்பன்னர்களால் சிறப்பித்து சொல்லப்படுகிறது.

பொதுவாக கிரகண காலங்களில் கோவில்களை மூடி வைத்து கிரகணம் முடிந்தபின் பரிகார பூஜைகள் நடத்திய பிறகே கோவில்கள் நடை திறப்பது வழக்கம். கொரோனா ஊரடங்கினாலும், நேற்று சூரிய கிரகணமாக அமைந்ததாலும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வழக்கம்போல் மூடப்பட்டிருந்தது. கிரகணத்திற்கு பின்னர், ஆகம விதிகளின்படி கோவில் மூலஸ்தானத்திற்கு அருகில் உள்ள காயத்திரி மண்டபத்தில் நவ கலசங்கள் பரப்பி காலை 11.30 மணிமுதல் 12.30 மணிவரை நம்பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடந்தது.

அர்ச்சகர்கள், உதவியாளர்கள் மட்டும் முன்னின்று இந்த திருமஞ்சனத்தை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »