ராமனின் பாதத்தை பிடித்துவிடும் அனுமன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ளது, சிறுவயல் பொன்னழகி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தில் ராமருக்கும் சன்னிதி அமைந்திருக்கிறது. பொதுவாக ராமர் இருக்கும் பல தலங்களிலும், அவருக்கு நேர் எதிரில் அவரை கைகூப்பி வணங்கியபடி அனுமன் இருப்பதை பார்க்க முடியும்.

இல்லையெனில் ராமனின் பாதத்திற்கு கீழே மண்டியிட்டு அவரை வணங்கிய நிலையில் அனுமன் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் ராமபிரானின் பாதத்தை பிடித்துவிடும் நிலையில் அனுமன் காணப்படுகிறார்.

சீதையைத் தேடி காடுகளில் அலைந்து திரிந்த ராமரின், பாத வலி நீங்குவதற்காக அவரது பாதத்தை அனுமன் தடவி விடுவதாக சொல்லப்படுகிறது. ராமருக்கு அருகில் சீதாதேவி, தன்னுடைய வலது காலை மேலே தூக்கி வைத்து அமர்ந்துள்ள காட்சியும் வித்தியாசமானது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »