சிவன் கோவிலில் பக்தர்கள் அரோஹரா கோஷம் எழுப்புவது ஏன்?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

முருகன் கோவிலாகட்டும், சிவன் கோவிலாகட்டும் பக்தர்களின் அரோஹரா என்ற கோஷம் கேட்கும். இதை ஏன் சொல்கிறார்கள்? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? முக்தி (பிறப்பற்ற நிலை) அருளும் தலங்கள் நான்கு.

திருவாரூரில் பிறக்க முக்தி;

காசியில் இறக்க முக்தி;
சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி;
ஆனால், யாராக இருந்தாலும் நினைத்த அளவிலேயே முக்தி அருளும் தலமாக இருப்பது திருவண்ணாமலை. பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில், அண்ணாமலைக்கு அரோஹரா எனச் சொல்லி சிவபெருமானை வணங்குவர்.

சிவனின் திருநாமங்களில் ஹரன் என்பதும் ஒன்று. இத்திருப்பெயரினைஹரன், ஹரன் என அடுக்குத்தொடர்போல சொன்னார்கள் ஒரு காலத்தில்! அது ஹர ஹர ஹர ஹர என்று மாறியது. பின்னர் அரோஹரா எனத் திரிந்தது. ஹர ஹர என்றால் சிவனே சிவனே என சிவபெருமானை கூவி அழைப்பதற்கு ஒப்பாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »