குழந்தைபேறு அருளும் மாங்கனி திருவிழா


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில், காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறும், ஒரு சில ஆலயங்களில் முதன்மையானது காரைக்கால் மட்டும்தான். இங்குள்ள கயிலாயநாதருக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதி உலாவைத் தொடர்ந்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர்.

இவ்வாறு இறைவன் மீது வீசப்படும் மாங்கனிகளை, குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவபெருமான் தனது பக்தனின் இல்லத்தில் அமுது உண்டார் என்றால், அது காரைக்கால் அம்மையார் இல்லத்தில் மட்டும்தான் என்பதை புராணங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டிச் செல்வார்.

சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பரிமாறுவார். இதை நினைவுகூரும் வகையில் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »