ஆதிசங்கரர் அருளிய சவுந்தர்யலஹரி மந்திரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சதாசிவத்துடன் ஒன்றி நின்று இந்த உலகத்தை வாழ வைத்து வரும் அகிலாண்டேசுவரியின் அருளினால் லட்சுமி கடாட்சம் குறைவரக் கிடைப்பதற்கும், வருங்காலத்தை முன் கூட்டியே உணருகின்ற அற்புதமான ஆற்றலைப் பெற்று வளமுடன் வாழவும் ஆதிசங்கரர் சவுந்தர்யலஹரி மூலமாக மந்திரத்தைத் தினம் தோறும் 1000 முறை 45 நாட்கள் ஜெபித்து வர வேண்டும்.

லட்சுமி கடாட்சம் சக்கரத்தை ஒரு காகிதத்தில் எழுதி தலையணையின் கீழ் வைத்துப்படுத்துக் கொண்டால் நாம் விரும்பிய பொருளை அடையும் வழி முறைகளைக் கனவு மூலம் அறிந்து கொள்ளலாம். தேவிக்கு நிவேதனமாகப் பால் பாயாசத்தை படைக்கலாம். இந்தச் சக்கரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் பதித்துப் பூஜை செய்து வீட்டில் பூஜையறையில் சட்டம் போட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் குறைவின்றி கிடைக்கும்.

ஒரு தட்டில் விபூதியைப் பரப்பி அதில் எழுதி வரலாம். நற்பலன்கள் கிட்டும். அதற்கான மந்திரம்.

“தடித்வந்தம் ஸக்த்யா திமிர பரிபந்த்தி-ஸ்புரணயா
ஸ்புரந்-நா நாரத் நாபராண – பரிணத் தேர்த்ர -தனுஷம்.
தவ ஸ்யாமல் மேகம் கம்பி மணிபூரனரக- ஸரணம்
நிஷேவ வர்ஷந்தம் ஹரமிஸிர- தப்தம் த்ரிபுவநம”

இந்த மந்திரத்தை ஜெபிக்கும் போது காலை வேளையில் வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமர்ந்து கொள்வது மிகவும் சிறப்பாகும். அன்னையின் அருள் கிடைப்பதற்கு உதவும் இந்தச் சக்கரமும் மந்திரமும் அனைவராலும் போற்றப்படுகிறது.

 

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »