அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் இல்லாமல் தொடங்கிய தட்சிணாயின பிரம்மோற்சவம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு விசேஷ நாட்களில் கோவில், கிரிவலப்பாதை மற்றும் நகரமே பக்தர்களால் மூழ்கி இருக்கும். இக்கோவிலில் பல்வேறு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் கூட்டமும் கோவிலில் அலைமோதும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் இன்றி வேத மந்திரங்கள் முழங்க தினமும் 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவிலில் நடைபெறும் விழாக்களில் தட்சிணாயின புண்ணிய கால பிரம்மோற்சவமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக நேற்று தட்சிணாயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இல்லாமல் தொடங்கியது. மேலும் விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஏதாஸ்தானத்தில் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »