இன்னல்கள் அகல விரதம் இருந்து இறை வழிபாடு செய்வது எப்படி?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இறைவனுடன் நாம் தொடர்பு கொண்டால் இன்னல்கள் அகலும் என்பது முன்னோர் வாக்கு. கண்ணுக்கு புலப்படாத இறைவனை நாம் கருத்தில் நிறுத்தி வழிபடுவதும், நம் குறையைச் சொல்வதும், தொலைபேசியில் மறுமுனையில் உள்ளவரை மனதால் நினைத்து நம் கருத்துக்களைச் சொல்வது போலத்தான் ஆகின்றது.

நம்மோடு உடன் இருப்பவர்களிடம் பேசாமலும், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்காமலும் இருந்தால் இறைவன் எப்படி நமக்கு உதவிக்கரம் நீட்டுவார். எனவே நமக்கு பொருத்தமான அளவுள்ள சிறிய விக்கிரகங்கள் சாமி சிலைகள், பொம்மைகள் போன்றவற்றை வீட்டில் வைத்து முறையாக விரதம் இருந்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

தொலைபேசியிலும், அலைபேசியிலும் எதிர்முனையில் உள்ளவர்களின் தோற்றத்தை பார்க்க இயலாது. தோற்றத்தைப் பார்த்து பேசும் பொழுது நமக்கு உற்சாகம் அதிகரிக்கும். எனவே தான் உருவ வழிபாடு நமக்கு உறுதுணை புரிகிறது. அதே சமயத்தில் அந்த உருவ சிலைக்கு தினமும் தவறாமல் பூஜையும், நைவேத்தியமும் செய்வது அவசியமாகும். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »