சர்ப்பதோஷம் நீக்கும் நாகராஜ விரதம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள். இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி, சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.

இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும். ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுக்ல பஷ சஷ்டியன்று அதி காலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.

பூஜைஅறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம் திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள், வைத்து நிவேதினம், செய்து தூபதீபம் காட்டுப் பிராத்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம்.

காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும். அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிட லாம். நாகராஜ விரத மிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும். அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக் காண லாம் என சர்ப்ப தோஷ பரிகார நூல் கூறுகிறது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »